செலரி என்ற கீரை வகையானது சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம் ஊரில் கொத்தமல்லியை உணவில் பயன்படுத்தப் படுவதைப் போல இந்த செலரி கீரை சீனாவில் பயன்படுத்தப் படுகிறது.
செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் 300 ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த கீரை அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.
செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக பயன்படுத்தப்படுகின்றன. சாலட்களிலும், காலிப்ளவர், காளான் மஞ்சூரியன் உணவுகளிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது.
மிகவும் நறுமணமுள்ள செலரியினை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும் ருசியும் முன்னணியில் நிற்கும்.
வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, காரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட் செய்வார்கள்.
இதில் செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் கலக்க வேண்டும். பச்சைக் காற்கறிகள் சேர்த்த இந்த சாலட் சத்துணவாக ஆகிவிடுகிறது.
செலரி தண்டுகளை பீநட் பட்டர் எனப்படுகிற வேர்க்கடலை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிடலாம். கேரட் ஜூஸ் உடன் செலரி துண்டுகள் சேர்த்துக் குடிக்கலாம்.
சூப், ஸ்டியூ, பொரியல் என எதை செய்தாலும் மேலே செலரியை நறுக்கித் தூவி சாப்பிடலாம். செலரி விதைகளில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், தாய்ப்பால் சுரப்பைத் தூண்டி, நரம்பு மண்டல இயக்கத்தை சீராக்கக் கூடியவை. தலைவலியையும் விரட்டும் சக்தி கொண்டவை.
சரி இனி செலரி கொண்டு அருமையான செலரி பிரியாணி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப்,
செலரி - 100 கிராம்,
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3,
கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர் உள்ளிட்ட காய்கறிக் கலவை - 1 கப்,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் - சிறிது,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
பாதாம் - 4,
வறுப்பதற்கு வெங்காயம் - அரை கப்,
குங்குமப் பூ - சிறிது,
காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் - 3 கப்.
செய்முறை:
கடாயில் வெண்ணெய் சூடாக்கி, சோம்பு தாளிக்கவும். பிறகு நறுக்கிய செலரி, உப்பு, இஞ்சி - பூண்டு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகளைச் சேர்த்து வதக்கி, காய்கறி வேக வைத்த தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதிக்கும் போது ஏற்கனவே அரை மணி நேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியைச் சேர்க்கவும்.
கேக் செய்ய பேக்கிங் ஓவன் தேவையில்லை குக்கரில் செய்வது எப்படி?
அரை டீஸ்பூன் பாலில் கரைத்த குங்குமப் பூவை அதில் கொட்டவும். உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைத்து வேக விடவும். இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு சீவிய பாதாம், வெங்காயம் சேர்த்து வறுத்துப் பரிமாறவும்.