அருமையான காரல் மீன் சொதி செய்வது எப்படி?





அருமையான காரல் மீன் சொதி செய்வது எப்படி?

0

மீனில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்று ஏராளமான நியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ளன. 

அருமையான காரல் மீன் சொதி செய்வது எப்படி?

இது தவிர மீன்களில் நல்ல கொழுப்பு மற்றும் அதிக புரோடீன் நிறைந்துள்ளது. மீன்களை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். 

மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு திறன், மூளை வளர்ச்சி மற்றும் அனீமியா உள்ளிட்டவைகளுக்கும் சிறந்தது. இந்தியாவில் அதிக ஆறுகள், ஏரி மற்றும் குளங்கள் நிறைந்துள்ளன. 

இதன் காரணமாக ஆண்டு முழுக்க எல்லா சமயங்களிலும் மீன் சாதாரணமாக கிடைக்கும் உணவாக இருக்கிறது. சரி இனி காரல் மீன் கொண்டு சுவையான காரல் மீன் சொதி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

எலுமிச்சை கலந்த தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் !

தேவையானவை .: 

காரல் மீன் - அரை கிலோ, 

தேங்காய் - அரை முடி, 

பச்சை மிளகாய் - 3, 

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,  

சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,

எலுமிச்சை பழம் - 1, 

சின்ன வெங்காயம் - 5, 

கறிவேப்பிலை - தேவையான அளவு, 

உப்பு - தேவையான அளவு, 

எண்ணெய் - தேவையான அளவு.

கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?

செய்முறை.: 

அருமையான காரல் மீன் சொதி செய்வது எப்படி?

தேங்காயை துருவி இரண்டு முறை பால் எடுக்கவும். இரண்டாவது முறையாக எடுத்த தேங்காய் பாலுடன், சீரகத் தூள், சோம்புத் தூள், மஞ்சள் தூள், 

பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், சுத்தம் செய்த காரல் மீனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

ஆப்கன் பெண்களின் நிலை... ஷரியத் சட்டம் என்ன சொல்கிறது?

நன்றாக கொதித்து வந்ததும் முதலில் எடுத்த தேங்காய் பாலை, சேர்த்து இறக்கவும். எலுமிச்சை பழத்தை ருசிக்கு ஏற்றவாறு பிழிந்து விடவும். 

பின்னர் வானலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, வெங்காயம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு தாளித்து சொதியில் ஊற்றினால் சூப்பரான சுவையான காரல் மீன் சொதி தயார்!

குறிப்பு :

தமிழகக் கடலோரக் கிராமங்களில் பெண்கள் மகப்பேறு காலத்திலும், பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும். காரல் மீனை அவித்து, சாறு எடுத்துக் குடிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)