வீட்டில் அம்மாக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை குழம்பு பிரச்சனை தான். காய்கறி விலை எல்லாம்
அவ்வப்போது உச்சத்துக்கு சென்று விடுவதால் அந்த சமயத்தில் வீட்டில் எதை வைத்து குழம்பு வைப்பது என புலம்பிக் கொண்டிருப்பாங்க.
மூளை முடக்கம் என்றால் என்ன? இது எப்படி ஏற்படுகிறது?
இது எல்லா பெண்களுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை தான். விதவிதமான குழம்பு வைக்க வேண்டுமானால் பல காய்கறிகளை வாங்க வேண்டும்.
டிபனுக்கு தனி சாம்பார், மதியம் சாப்பாட்டுக்கு தனியாக குழம்பு, பொரியல், அவியல் என்று செய்வதற்கு காய்கறி வாங்க வேண்டியது அவசியமாகும்.
இப்படி பல அயிட்டங்கள் செய்வதற்கு செலவு அதிகம் ஆகும் என்பதால் தான் சில வீடுகளில் ஒரு குழம்பை வைத்து அதையே மூன்று வேளைக்கும் சாப்பிட்டுக் கொள்கின்றனர்.
அந்த ஒரு குழம்புக்கும் ஏதாவது ஒரு காய்கறி தேவைப்படுகிறது அல்லவா?
காய்கறி இல்லாமல் குழம்பு வைப்பது கஷ்டம் என்பதால் அதை சமாளிக்க ஒரு வழி.
உங்கள் ஊரில் உழவர் சந்தை அல்லது பெரிய காய்கறி சந்தை இருக்கிற தென்றால் அங்கு சென்று சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்குங்கள்.
பனிக்குடத்தில் தண்ணீர் இருந்தும் எப்படி குழந்தை உயிர் வாழ்கிறது?
சந்தையில் மலிவு விலைக்கு காய்கறிகளை விற்க மாட்டாங்க. அன்று மார்க்கெட் ரேட் என்னமோ,
அதற்கு தகுந்த மாதிரி தான் விலை நிர்ணயம் செய்யப்படும். அப்புறம் எப்படி மலிவு விலைக்கு கிடைக்கும்?
மலிவு விலைக்கு காய்கறி வாங்க வேண்டும் என்றால் நீங்க கொஞ்சம் தாமதமாக சந்தைக்கு செல்ல வேண்டும்.
தாமதமாக செல்லும் போது பெரும்பாலான வியாபாரிகள் எல்லாத்தையும் விற்று முடித்திருப்பாங்க.
பிறகு அங்கு சென்று எதை வாங்குவது என குழம்ப வேண்டாம். எல்லா கடைகளிலும் வியாபாரம் முடிந்திருக்காது.
ஒரு சில வியாபாரிகள் இன்னும் முழுமையாக எல்லா காய்கறிகளையும் விற்றிருக்க மாட்டாங்க.
குழந்தைகளுக்கு வசம்பு அணிவிப்பதன் அவசியம் என்ன?
கடைசி நேரத்தில் சென்றால் வியாபாரிகள் வந்த விலைக்கு விற்று விட்டு கிளம்ப நினைப்பார்கள்.
பொருட்கள் குறைந்து விட்டால் விலையை குறைப்பது மிக எளிது.
சரக்கு சீக்கிரம் காலியாக வேண்டும் என நினைத்து வியாபாரிகள் பலரும் விலையை சற்று குறைத்து தள்ளி விடுவதில் குறியாக இருப்பாங்க.
அந்த நேரத்தில் நீங்கள் சாதாரண விலையை விட சற்று குறைவான விலைக்கு காய்கறிகளை வாங்கிக் கொள்ள முடியும்.
திணை இனிப்பு பொங்கல் செய்வது எப்படி?
எல்லா வியாபாரிகளும் இப்படி இருக்க மாட்டாங்க. ஒரு சிலர் மட்டுமே கடைசி நேரத்தில் விலையை குறைத்து சரக்கை காலி பண்ணுவாங்க.
அப்படிப்பட்ட கடைகளை தேடிப்பிடித்து வாங்குவது உங்களுடைய சாமர்த்தியம் தான். நீங்களும் ஒருமுறை இந்த யுக்தியை செய்து பாருங்களேன்.