சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals





சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals

0

கோடைக் காலத்துக்கும் தாகத்துக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடங்காது. 

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals
சாப்பிடும் நேரத்தில் இன்னொரு பிரச்னை... முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்த உடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்து விடும். 

தண்ணீர் குடித்த பிறகு தான் நிற்கும். ஆனால், சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது என்பது பலரின் அறிவுரை. 

சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?

இந்தக் கருத்துகள் ஒருபுறம் இருக்கட்டும். நம் உடலுக்கு என்ன தேவையென்பதை நம் உடலே சில சமிக்ஞைகளின் மூலம் நமக்கு உணர்த்தி விடும். 

உதாரணமாக, உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால், தாகம் எடுக்கும். அப்போது கண்டிப்பாகக் குடிக்கத் தான் வேண்டும். 

அது சாப்பிடும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை. உடலின் தேவையைப் பூர்த்தி செய்தே ஆக வேண்டும். 

இல்லை யென்றால், தேவையில்லாத உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என்பது மற்றொரு சாரரின் கருத்தாக இருக்கிறது.

சாப்பாட்டுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது. 

சிலர், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்து விடும் என்கின்றனர்.

தினம் தோறும் செய்யும் சிறிய விஷயங்கள், நம் அன்றாட நடைமுறையாக மாறி, வாழ்வியல் பழக்க வழக்கங்களாக மாறி விடுகின்றன. 

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !

நாம் பின்பற்றும் வாழ்வியல் பழக்க வழக்கங்கள் சில, நம்முடைய சுகாதார மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாகவும், தீர்வாகவும் மாற வாய்ப்புள்ளது.

அதில் ஒன்று தான், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அருந்துவது, சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது. 

இந்த விஷயங்களில் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் நாள்தோறும் இருந்த வண்ணம் உள்ளது. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்வை பரிந்துரைக்கும் நிலையில் ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் : 

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals

சாப்பாட்டுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது. 

சிலர், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்து விடும் என்கின்றனர். 

இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம் !

அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கின்றனர். 

மருத்துவர்களும் உடல் எடையை குறைப்பதற்கு சாப்பிடுவதற்கு முன்பு குறிப்பிட்ட அளவு தண்ணீரை பருகுமாறு பரிந்துரைக்கின்றனர். 

ஆனால் ஆயுர்வேத முறைப்படி சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் உடல் பலவீனம் அடைவதற்கும், மயக்க மடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறது.

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் : 

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals

உணவருந்தும் போது தாகம் அல்லது விக்கல் எடுத்தாலோ குறைந்த அளவிலான தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். 

உணவருந்தும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தில் என்சைம் செயல்திறன் குறைத்து, 

உடலில் வேண்டாத நச்சுக்கள் அதிகமாக உருவாகும் அபாயமும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

சுவையான பப்பாளிக்காய் கூட்டு செய்வது எப்படி?

ஏனென்றால், வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது. அதோடு, உணவிலுள்ள சத்துகள் சரியாக உடலுக்குக் கிடைக்காது. 

ஆனால், ஆயுர்வேத முறைப்படி உணவருந்தும் போது, குறைந்த நீரை உறிஞ்சிக் குடித்தால் செரிமான மண்டலத்துக்கு நல்லது என கூறப்பட்டுள்ளது. 

உணவுகளை உடைப்பதற்கு நீர் உதவியாக இருக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

சாப்பிடும் போது தாகம் எடுக்கிறதே, எப்படிக் குடிக்காமல் இருக்க முடியும்?' என்பார்கள் சிலர். 

அப்படித் தாகம் எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. அதற்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். 

உடலில் தண்ணீர் வற்றி, தொண்டை வறண்டு, தாகம் எடுக்கட்டும் என்று காத்துக் கொண்டிருக்கக் கூடாது. 

அருமையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி? 

நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் (Hydrochloride and Dijestive Juices) சுரக்கும். 

சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் (Dilute) போகும். அதன் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். 

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals

இது தொடர்ச்சியாக நிகழும் போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். உதாரணமாக, எந்த விலங்கும் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்காது. 

இயற்கையின் நியதியே அதுதான். விக்கல் ஏற்படுகிறது, அடைத்துக் கொள்கிறது. அதனால் தான் குடிக்கிறோம் என்று சிலர் காரணம் சொல்வார்கள். 

இதற்கு, உடலுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம் அல்ல. நாம் சாப்பிடும் முறை தவறு என்று தான் அர்த்தம். 

உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் செய்வது எப்படி?

சாப்பிடும் போது நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் விக்கல் எடுக்காது. 

தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதையும் மீறி விக்கல் வந்தால் கொஞ்சம் குடித்துக் கொள்ளலாம்.

சாப்பாட்டு பின் தண்ணீர் :  

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals

ஆயுர்வேத முறையில் உணவு உட்கொண்ட உடனேயே தண்ணீர் உட்கொள்வதால், சீரான செரிமானம் தடைப்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. 

உணவருந்திய பிறகு 30 நிமிட இடைவேளைக்கு பின் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

சில்லி பிளேக்ஸ் தயார் செய்வது எப்படி?

உணவு சாப்பிட்ட 1 - 2 மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் தாகத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் குடிக்கலாம். 

உணவருந்தும் போது சோடா பானம், காபி போன்றவற்றை பருக வேண்டாம். இது உடல்நலத்திற்கு நல்லதல்ல.

ஆலோசனை : 

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals
சிறந்த வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்திற்காக எப்போதும் சூடான நீரை உணவுடன் குடிக்கலாம். 

உலர்ந்த இஞ்சி தூள், வெட்டிவர் வேர்கள், பெருஞ்சீரகம் விதைகளையும் உணவுக்கு இடையில் உட்கொள்ளும் தண்ணீரில் சேர்க்கலாம் என ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

சுவையான உருளைகிழங்கு பட்டாணி மசாலா செய்வது எப்படி?

நம் உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. அதனால் தண்ணீரால் நம் உடலுக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை. 

காலையில் தூங்கி எழுந்ததும், வெறும் வயிற்றில் நம்மால் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு குடிக்கலாம். அது உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)