கேரட் ஏன் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது? #carrot





கேரட் ஏன் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது? #carrot

0

5,000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கேரட் சாப்பிட்டு வருகின்றனர். இந்த காய் மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தோன்றியது. 

கேரட் ஏன் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது? #carrot
ஆரம்பத்தில் ஊதா மற்றும் மஞ்சள் வண்ணங்களில் மட்டுமே கிடைத்த கேரட் நமக்குப் பழக்கமான ஆரஞ்சு நிறத்தில் 1600 களில் இருந்து தான் உருவாக்கப்பட்டது.

இன்று ஆராய்ச்சியாளர்கள் கேரட்டை மஞ்சள், பிரகாசமான சிவப்பு மற்றும் அடர் ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் உற்பத்தி செய்கிறார்கள். 

ஆனால் கவனத்தை ஈர்ப்பது என்ன வென்றால், முக்கியமான நன்மைகளை வழங்கும் கேரட்டில் உள்ள நிறமிகளின் தொகுப்பு (1) எனலாம். இனிப்பான சுவை கொண்ட கேரட் அதன் குணத்திலும் இனிமையானது. 

இதில் அளவிட முடியாத நன்மைகள் நிரம்பி உள்ளன. இதில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் மேலும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 

கை விரல்களை தேய்த்தால் முடி வளரும் !

கேரட்டை உண்பதால் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல், உடலுக்குத் தேவையான புரதம் கொடுத்தல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எல்லாம் குணம் அடையும்.

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் இருக்காது. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் முழுமையாக நம்மை வந்து சேரும்.

கேரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்துக்கள் உள்ளது. இவை நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகிறது. மேலும் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது.

கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோயை தடுக்கும், நோய் தாக்கி இருந்தால் குணமாக்கும். 
இருமல் மருந்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க !
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வாரம் ஐந்து நாட்கள் மட்டும் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காமல் அருந்தி வந்தால் வாய் துர்நாற்றம் போய் விடும். 

மேலும் பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக கேரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள்  போய் விடும்.

கேரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது. தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)