சீனித் துளசியை இனிப்பூட்டியாக பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் !





சீனித் துளசியை இனிப்பூட்டியாக பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் !

0

மனிதனின் தினசரி உனவு முறைகளுள் சர்க்கரையானது முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

சீனித் துளசியை இனிப்பூட்டியாக பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் !

நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சர்க்கரையானது, கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதே ஆகும். 

கரும்பு சர்க்கரையானது அதிகமான கலோரிகளைக் கொண்டுள்ளதால், சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்க்கரையைப் பயன்படுத்த முடியாமல் உள்ளனர். 

தற்போது இவர்கள் கரும்பு சர்க்கரைக்குப் பதிலாக இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரையைப் பயன்படுத்தலாம். 

நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் - எதற்காக? எங்கு நடந்தது தெரியுமா?

ஏனெனில், இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை, கலோரிகளை உருவாக்குவதில்லை. 

ஆகவே இதனைக் கரும்பு சர்க்கரைக்குப் பதிலாகவும், செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.

சீனித் துளசியை இனிப்பூட்டியாக பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் !

இனிப்புத் துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside) என்னும் வேதிப்பொருள்களே இனிப்புத் தன்மைக்கு முக்கிய காரணமாகும். 

இனிப்புத் துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால், கரும்பைவிட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது. 

மேலும், ஸ்டீவியோசைடில் உள்ள இனிப்பின் அளவு சர்க்கரையைவிட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது. 

இனிப்புத் துளசியின் உலராத இலைகளில் (Fresh leaves) 15-20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டீவியோசைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. 

சீனித் துளசியை இனிப்பூட்டியாக பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் !

உலர் இலைகளில் (Dried leaves) ரெபடையோசைடு – ஏ (Rebaudioside-A) 2-4 சதவிகிதமும் உள்ளது. 

மேலும் கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது.

நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு?

இரத்த அழுத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்கச் செய்வதில்லை.

இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (zero Calories) மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை.

சீனித் துளசியை இனிப்பூட்டியாக பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் !

ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், 

பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.

இதைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)