சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?





சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

0

உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும்  மற்றும் வைட்டமின் டி அடங்கியுள்ளது.  

சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

மலேரியா காய்ச்சலுக்கு புதிய மருந்து !

இறாலில் அயோடின் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது. 

இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.

விடுமுறை நாட்களில் வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட விரும்புவோம். அதுவும் நீங்கள் இறால் பிரியர் என்றால், 

இந்த வார இறுதியில் அந்த இறாலைக் கொண்டு ஒரு சுவையான சைடு டிஷ்ஷை செய்து சாப்பிடுங்கள். 

இந்த செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

இறால் குடமிளகாய் வறுவல் செய்முறை !

தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம்

உப்பு - சுவைக்கேற்ப

மஞ்சள் தூள் - சிறிது

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

பட்டை - 1 இன்ச்

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

வரமிளகாய் - 2

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

18 ஆண்டுக்கு பிறகு என்னுடைய முதல் லீவ் - பகிர்ந்த மோடி !

செய்முறை:

சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் சுத்தம் செய்த இறாலை ஒரு பௌலில் எடுத்து, 

அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இறால் தயிர் பிரியாணி செய்முறை !

பின்பு மிக்சர் ஜாரில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கி, அதைத் தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து அதில் அரைத்த மிளகு சீரக பொடி, கரம் மசாலா, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.

மீன் புட்டு செய்முறை !
அதன் பின் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி 7-8 நிமிடம் இறாலை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)