சுவையான மேங்கோ மலாய் கேக் செய்வது எப்படி?





சுவையான மேங்கோ மலாய் கேக் செய்வது எப்படி?

0

மாம்பழ கூழை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு உலர்ந்ததும் கழுவி விடலாம். சருமம் புத்துணர்வுடன் காட்சியளிக்கும். சரும துளைகளும் நீங்கும். 

சுவையான மேங்கோ மலாய் கேக் செய்வது எப்படி?
மாம்பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி வைட்டமின் ஏ சத்தும், 25 வகையான கரோட்டினாய்டுகளும் உள்ளடங்கி இருக்கிறது. 
போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் !

இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மாம்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. 

ரத்தசோகை பிரச்சனையை எதிர் கொள்பவர்களுக்கு இயற்கையாகவே தீர்வு வழங்கக் கூடியது. ஆதலால் இரும்புச்சத்து குறைபாடு கொண்ட பெண்கள் அவசியம் மாம்பழம் சாப்பிட வேண்டும். 

மாம்பழத்தில் இருக்கும் குளூட்டமைன் அமிலம், நினைவாற்றல் திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. 

மேலும் மாம்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் போன்றவை உடலின் கார சமநிலையை சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது. 

சரி இனி மாம்பழம் கொண்டு சுவையான மேங்கோ மலாய் கேக் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

பால் - 1 1/2 கப்

பிஸ்கட் - 5

மாம்பழம் - 2 (தோல் நீக்கியது)

சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்

மலாய் - 2 டீஸ்பூன்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

துருவிய ஒயிர் சாக்லேட் - சிறிதளவு

பொடியாக நறுக்கிய பிஸ்தா - தேவையான அளவு

வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம் !

செய்முறை

சுவையான மேங்கோ மலாய் கேக் செய்வது எப்படி?

மாம்பழங்களை சுத்த செய்து தோல் நீக்கி கொள்ள வேண்டும். இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் விழுதாக அரைது கொள்ள வேண்டும்.
தனியா பிரியாணி செய்வது எப்படி? 

ஒரு கடாயில் பால், சர்க்கரை, சோள மாவு போட்டு கட்டியில்லாமல் நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து நன்கு கிளற வேண்டும். 

அடிபிடிக்காமல் கலவை கெட்டியாகும் வரை கலக்க வேண்டும். சிறிது தளர்வான பதத்தில் இருக்கும் போதே அடுப்பை அணைத்து விட வேண்டும். 

இந்த கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது அதனுடன் மலாய் கிரீமை சேர்க்கவும். இதை மீண்டும் அடுப்பில் வைத்து  கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 

அனைத்தும் ஒன்றாக கலந்து பசை பதத்தில் வந்ததும் கலவையை இறக்கி வைத்து ஆறவிட வேண்டும். நன்கு ஆறியதும், கலவை கெட்டி பதத்திற்கு வந்து விடும். 
இதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் இப்படி ஒரு அற்புதம் !

அப்போது அரைத்து வைத்த மாம்பழ விழுதை சேர்த்து கலக்க வேண்டும். அனைத்தும் ஒன்றாக கலந்தால் அல்வா பதத்துக்கு மாறி விடும்.

இதை அப்படியே வைத்து விட்டு எடுத்து வைத்துள்ள பிஸ்கட்களில் 5 மட்டும் தூளாக்கி கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடி தட்டில் முதலில் முழு பிஸ்கட்டுகளை அடுக்கி கொள்ள வேண்டும். 

அதன் மேல் மாம்பழ கலவையை பரப்பி வேண்டும். அதன்மேல் தேங்காய் துருவலை தூவ வேண்டும். முதலில் செய்தது போல் இரண்டாவதாக ஒரு லேயரை உருவாக்க வேண்டும். 

இதன் மேல் அலங்கரிக்க துருவிய ஓயிட் சாக்லேட், நறுக்கிய மாம்பழத்துண்டுகள், பொடித்த பிஸ்கட் தூள் ஆகியவற்றை பரவலாக தூவ வேண்டும்.

தயார் செய்த இந்த கலவையை ஃப்ரிஜ்ஜில் 2 மணிநேரம் வைக்க வேண்டும். தற்போது மேங்கோ மலாய் கேக் பரிமாற தயாரான நிலையில் இருக்கும். இதை துண்டுகளாக்கி பரிமாறலாம். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)