வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணை புரிகிறது.
நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன.
உணவை எளிதில் சீரணிக்க செய்யும் வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடியதும் கூட. மேலும், உடலில் ரத்தத்தை அதிகரிக்கவும் செய்யும்.
சரி இனி வாழைப்பழம் கொண்டு சுவையான சாக்லேட் பனானா கேக் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
சங்கு போன்ற கழுத்து வேணுமா?
மைதா மாவு - 250 கிராம்
சர்க்கரை - 5 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
பழுத்த வாழைப்பழம் - 2
காய்ச்சிய பால் - 4 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மில்லி
சாக்லேட் துண்டுகள் - தேவைக்கேற்ப
செய்முறை:
மைதா, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவை நான்கையும் ஒன்றாகக் கலந்து சலித்து எடுக்கவும்.
ஆண்களை விட பெண்களுக்கு தூக்கம் அவசியம் !
அதை வாழைப்பழ கலவையில் கொட்டிக் கிளறவும். அதில் சிறிது சிறிதாக பால் ஊற்றி பசை போல, சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் வினிகர் மற்றும் சாக்லேட் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தின் உட்பகுதி முழுவதும் எண்ணெய் தடவி இந்தக் கலவையை அதில் ஊற்றவும்.
பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் என்ன நன்மை?
மிதமான தீயில் 30 நிமிடங்கள் வரை வேக வைத்து பின்பு ஆற வைக்கவும். இப்பொழுது சுவையான சாக்லேட் பனானா கேக் தயார்!