சுவையான கூர்க் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?





சுவையான கூர்க் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

0

சிக்கனில் பாஸ்பரஸ், கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது. மேலும் இதில் மக்னீசியம் உள்ளதால், பெண்களுக்கு ஏற்படும் வயிறு வலியைப் போக்குகிறது. 

சுவையான கூர்க் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?
இதிலுள்ள ஜிங்க் சத்து, ஆண்களின் டெஸ்ட்ரோஜன் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆட்டிறைச்சியை விட கோழி இறைச்சியில் குறைந்த கொழுப்பு உள்ளது. 

சிக்கனில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எடை இழப்புக்கு சிக்கன் சூப் மற்றும் க்ரில் செய்யப்பட்ட சிக்கன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

ஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும்

உடல் எடையை குறைக்க வாரத்திற்கு இரண்டு முறை 100 கிராம் கோழிக்கறி சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. 

தேவையான பொருட்கள்

ஊற வைப்பதற்கு….

சிக்கன் - 3/4 கிலோ

ரெட் ஒயின் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்

கூர்க் மசாலா பவுடர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு…

ஏர் கண்டிஷன் மூலம் கொரோனா பரவுமா? ஆய்வு என்ன சொல்கிறது?

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

சின்ன வெங்காயம் - 5 (தோலுரித்து, நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

கூர்க் மசாலா பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 

கூர்க் மசாலா பவுடருக்கு…

மல்லி - 3 டேபிள் ஸ்பூன்

கிராம்பு - 4

கடுகு - 1/4 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

பட்டை - 1 இன்ச் துண்டு

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பச்சை ஏலக்காய் - 1-2

வாரத்தில் எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது?

செய்முறை:

சுவையான கூர்க் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கூர்க் மசாலா பவுடருக்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் போட்டு வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

வெள்ளரிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள் !

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஊற வைப்பதற்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து, 1-2 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு அடுப்பில், அகன்ற வாணலியை வைத்து, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, 

கடுகு, கறிவேப்பிவை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, நன்கு வதக்க வேண்டும். பிறகு மிளகாய் தூள், கூர்க் மசாலா பவுடர் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

கோவை ஆனந்தாஸ் நெய் போளி செய்வது எப்படி?

பின் வெந்து கொண்டிருக்கும் சிக்கனை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, சிக்கன் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவி 15-20 மூடி வைத்தால், சூப்பரான கூர்க் சிக்கன் குழம்பு ரெடி !

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)