சுவையான வேர்க்கடலை கட்லெட் செய்வது எப்படி?





சுவையான வேர்க்கடலை கட்லெட் செய்வது எப்படி?

0

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த கொட்டைகள் பீட்டா-சிட்டோஸ்டெரால் (beta-sitosterol) நிரம்பியுள்ளன. 
சுவையான வேர்க்கடலை கட்லெட் செய்வது எப்படி?
இது புற்று நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. 
வேர்க்கடலையில் இதயத்தை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. பல்வேறு இதய பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். 

வேர்க்கடலையின் இந்த கார்டியோ பாதுகாப்பு பண்புகள் நீண்ட காலத்திற்கு இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது மற்றும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 

சரி இனி வேர்க்கடலை கொண்டு சுவையான வேர்க்கடலை கட்லெட் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையானவை: 

காய்ந்த வேர்க்கடலை - ஒரு கப், 

உருளைக்கிழங்கு - 2, 

பிரெட் துண்டுகள் - 3, 

பச்சை மிளகாய் - 4, 

இஞ்சி - ஒரு துண்டு, 

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, 

பிரெட் தூள் - ஒரு கப், 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையான முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?

செய்முறை: 
சுவையான வேர்க்கடலை கட்லெட் செய்வது எப்படி?
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசிக்கவும். வேர்க்கடலையை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 

பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை விழுதாக அரைக்கவும். பிரெட் துண்டுகளை தண்ணீரில் போட்டு, உடனே எடுத்துப் பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

சுவையான ஜாப்பனீஸ் சீஸ் கேக் செய்வது எப்படி?

இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு சேர்த்துப் பிசைந்து, விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்து, பிரெட் தூளில் புரட்டி எடுத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)