தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?





தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

0

பனீர் ஒரு ஆரோக்கியமான பால் உணவாகும். தினசரி பனீரை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நமது உடல் ஆரோக்கியமானது மேம்படுகிறது. பனீர் ஜீரணிக்க எளிதான ஒரு உணவாகும்.

தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

இதில் செலினியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டிற்குமே நன்மை பயக்கிறது. தாபா ஸ்டைல் உணவுகள் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும். 

இதற்கு அதில் சேர்க்கப்படும் மசாலா தான் காரணம். நீங்கள் இந்த தாபா ஸ்டைல் ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய ஆசைப்படுகிறீர்களா? 

இந்த மசாலா சப்பாத்தி, நாண், புல்கா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இது விடுமுறை நாட்களில் செய்து சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

சரி இனி பன்னீர் கொண்டு சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

வெங்காயம் உடலில் ஏற்படுத்தும் நன்மைகள் !

தேவையான பொருட்கள்:

தாபா மசாலாவிற்கு...

மல்லி விதைகள் - 2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1/4 டீஸ்பூன்

கிராம்பு - 3

ஏலக்காய் - 2

பட்டை - 1/2 இன்ச்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

ஊற வைப்பதற்கு...

பன்னீர் - ஒரு கப்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

உப்பு - 1/4 டீஸ்பூன்

நெய்/வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு...

நெய்/வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பிரியாணி இலை - 1

ஏலக்காய் - 2

பட்டை - 1 இன்ச்

கிராம்பு - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

தயிர் - 1/2 கப்

தண்ணீர் - 1/2 கப்

உலர்ந்த வெந்தய கீரை/கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

ஆரோக்கியமாக செயல்பட உணவே காரணம் !

செய்முறை:

தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

முதலில் ஒரு பெரிய பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

நோயில்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க இந்த கீரை சாப்பிடுங்க !

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீரை ஒரு நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாபா மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து குறைவான தீயில் நன்கு வறுத்து இறக்கி, குளிர்ந்ததும் மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் எண்ணெயின் பயன்கள் !

அடுத்து ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தாபா மசாலா பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து குறைவான தீயில் வதக்க வேண்டும்.

பின்பு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின், அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி, எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.

பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

சீனாவில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க இதை சாப்பிடுறாங்களாம் !

அதன் பின் உலர்ந்த வெந்தய கீரை, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)