வெள்ளை சோள மாவு தோசை செய்வது எப்படி?





வெள்ளை சோள மாவு தோசை செய்வது எப்படி?

0

சோளத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் இது எழும்புகளை பலப்படுத்துகிறது. இது கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸின் அச்சுறுத்தலை  தடுக்கிறது. 

வெள்ளை சோள மாவு தோசை செய்வது எப்படி?
இறால் திதிப்பு செய்முறை !

அஜீரணம் மலச்சிக்கல் பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. இது போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் சோள ரோட்டியை கட்டாயமாக உட்கொள்ள வேண்டும். இதில் நல்ல  அளவில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. 

இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது, சோளத்தில் அதிக அளவில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது, இது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்கிறது. 

மேலும், இரத்த சோகை அபாயத்தை குறைக்கிறது. இரத்த சோகை உள்ளவர்கள் தங்கள் உணவில் சோளத்தை உட்கொள்ள வேண்டும். 

கால்சியம் குறைபாடு பலவீனமான எலும்புகள் மற்றும் எலும்பு தொடர்பான வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. சோளத்தை உட்கொள்வதன் மூலம், எலும்புகளை  பலப்படுத்த முடிகிறது.  

இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம், நம் ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளே என பல ஆய்வுகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

நம்ம உண்ணும் உணவு முழுவதும் செரித்து விட்டால், நமக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது. வெள்ளை சோளத்தில் 48 சதவீதம் நார் சத்து இருப்பதால், இது சிறந்த கொழுப்பு கரைப்பானாக செயல்படுகிறது. 

இதில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள், எலும்பை உறுதி படுத்துகின்றன. செரிமானத்தை அதிகரித்து, கொழுப்புகளை கரைத்து, ரத்த சர்க்கரை அளவை சமன்படுத்தி, 

கால்சியம், இரும்பு சத்து, புரதம் ஆகியவற்றை அள்ளி தரும் அருமருந்தாம் வெள்ளை சோளத்தில், தோசை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

அர்ட்டிகேரியா என்கிற காணாக்கடி !

தேவையான பொருட்கள்: 

வெள்ளை சோளம்  - 1 டம்ளர்

இட்லி அரிசி  - 1 டம்ளர்

உளுந்து  - 1/2 டம்ளர்

வெந்தயம்  - 1/2 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

செய்முறை: 

வெள்ளை சோள மாவு தோசை செய்வது எப்படி?

மூன்று பங்கு வெள்ளை சோளம், ஒரு பங்கு பச்சரிசியுடன் சேர்த்து அதில் நீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு பத்திரத்தில், ஒரு பங்கு உளுந்தம் பருப்புடன், சிறிதளவு  வெந்தயம் சேர்த்து தண்ணீரில் ஊற வைக்கவும். 

4 மணி நேரத்திற்குப் பின் இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து, தேவையான அளவு உப்பு போட்டு புளிக்கும் வரை காத்திருக்கவும். 

பின் அதை வழக்கமான முறையில் தோசையாக வார்த்து எடுக்கவும். தேங்காய், தக்காளி, வெங்காயம் போன்ற எந்த சட்னியும் தொட்டு சாப்பிடலாம். 

ஃபிஷ் மொய்லி செய்முறை !

சைடு டிஷ் உங்கள் இஷ்டம் தான். இதே மாவில் பணியாரமும் கூட செய்து சாப்பிடலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)