முட்டைகளில் இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், கொழுப்பு, புரதம், கோலின், பயோட்டின் - வைட்டமின் பி 7, வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் மற்றும் அயோடின் ஆகியவை உள்ளன.
இதன் சிறப்பு என்னவென்றால் இவற்றை நாம் சுலபமாக செய்து விடலாம். இன்று நாம் பார்க்க இருப்பது முட்டை கபாப் ரெசிபி.
வேக வைத்த முட்டை- 4
சாட் மசாலா- 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள்- 1/4 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
சோள மாவு- ஒரு தேக்கரண்டி
வெண்ணெய்- ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள்- 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
உப்பு- 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை- சிறிதளவு
எண்ணெய்- தேவையான அளவு
நறுக்கிய வெங்காயம்- 1
தக்காளி விழுது-1
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் விழுது- ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை- சிறிதளவு
செய்முறை:
இதனோடு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காய விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த கலவையில் சோள மாவு சேர்த்து உருண்டையாக பிடிக்கவும். அடுத்து தோசைக்கல்லில் வெண்ணெய் சேர்த்து அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
இதே தோசைக்கல்லில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.
சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா?
இப்போது தக்காளி விழுது சேர்த்து கிளறவும். இதனோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். ஒரு கொதி வந்தவுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடலாம்.
கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவவும். இந்த சமயத்தில் நாம் தயார் செய்து வைத்த முட்டை கபாபை சேர்த்து விடலாம்.
அவ்வளவு தான்… ருசியான முட்டை கபாப் தயார்.