மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில் அதிகம் சாப்பிடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பசி இல்லா விட்டாலும் கூட பிடித்தமானவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடவும் செய்கிறார்கள்.
உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மன நல பிரச்சினைகள் என எண்ணற்ற பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஒரு சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இப்படி அவசியமில்லாமல் சாப்பிடும் வழக்கத்தை கட்டுப்படுத்தி விடலாம்.
முன்னோர்கள் அதற்கு வயாகராவாக பயன்படுத்திய உணவு தெரியுமா?
மெதுவாக சாப்பிடுங்கள்
அவசரம் அவசரமாக சாப்பிட்டு முடித்து விட்டு வேலை செய்ய தொடங்கி விடுவார்கள். இந்த வழக்கம் தவறானது.
அவசரப்படாமல் மெதுவாக சாப்பிடும் போது உண்ணும் உணவின் அளவு குறைந்து விடும். அதாவது மெதுவாக சாப்பிடுபவர்கள் குறைவாகவே சாப்பிடுவார்கள்.
ஏனென்றால் வயிறு நிரம்பி விட்டது என்பதை மூளைக்கு தெரியப் படுத்துவதற்கான ரசாயனங்களை வெளியிடுவதற்கு சுமார் 20 நிமிடங்களாவது ஆகி விடும்.
ஆனால் வேகமாக சாப்பிடும் போது திருப்தியாக சாப்பிட்டதற்கான சமிக்ஞை மூளையை சென்றடைய முடியாமல் போவதால் அதிகமாக சாப்பிட்டு விடுவீர்கள்.
உணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு !
மெதுவாக சாப்பிடும் போது குறைவாக சாப்பிட விரும்புவீர்கள். ரசித்தும் சாப்பிடுவீர்கள்.
சாப்பிட உட்கார்ந்ததும் மனதை அலைபாய விடாமல் கவனம் முழுவதையும் சாப்பிடும் தட்டு, உணவின் நிறம், சுவை மீது பதியுங்கள். உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்.
அதிக முறை மெல்லுங்கள். உணவை கையால் சாப்பிடுவதற்கு பதிலாக ஸ்பூன் உபயோகிக்கலாம். அது இயல்பாகவே சாப்பிடும் அளவை குறைப்பதற்கு வழிவகுக்கும்.
உணவு தேர்வு முறை
உதாரணமாக சிப்ஸ்க்கு பதிலாக நட்ஸ் வகைகளை வாங்கலாம். சாக்லேட்டுக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை தேர்வு செய்யலாம்.
பெரிய பொருட்களுக்கு மாற்றாக சிறிய பொருட்களை வாங்க முயற்சிக்கலாம். அவை அதிகமான கலோரிகளை உட்கொள்வதை குறைப்பதற்கு வழிவகுக்கும்.
பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கும் போது அதிகமாக சாப்பிடக் கூடும். அந்த சமயத்தில் உணவு தேர்வில் கவனம் தேவை.
ஒரு கிண்ணம் பழமா? அல்லது ஒரு கிண்ணம் ஐஸ்கிரீமா? பீட்சாவா? சாலட்டா? என்பதை பொறுத்து தான் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
கடல் மட்டத்திலிருந்து உயரம் கூடும் போது வெப்பநிலை குறைவது ஏன்?
கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள்
அவ்வாறு செய்வதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவதாக கருதலாம். ஆனால் தேவைக்கு அதிகமாகவே சாப்பிட்டு விடுவீர்கள்.
சில சமயம் ஆரோக்கியமற்ற உணவாக அது இருக்கக் கூடும். இவை இரண்டுமே உடல் நலத்திற்கு உகந்தது அல்ல. சாப்பிடும் போது கவனம் முழுவதும் உணவு மீது மட்டும் தான் இருக்க வேண்டும்.
அதிசய சத்துக்கள் நிறைந்த ஆப்ரிகாட் பழம் !
சிறிய தட்டு பயன்படுத்துங்கள்
சாப்பிடுவதற்கு சிறிய தட்டுகள், கிண்ணங்களை பயன் படுத்துவார்கள். எல்லோருமே தட்டில் வைக்கப்படும் உணவில் 92 சதவீதத்தை சாப்பிட்டு முடித்து விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, தட்டின் அளவை குறைக்கும் போது அதில் வைக்கப்படும் உணவின் அளவும் குறைந்து போய் விடும். ஜப்பானியர்கள் பெரும்பாலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர் கொள்வதில்லை.
அமெரிக்காவில் உள்ள வயதான ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (51.6%) அதிக எடை கொண்டவர்கள். 43.1% பெண்களும் உடல் பருமன் பிரச்சினையை எதிர் கொள்கிறார்கள்.
மதிய நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவு வகைகள் !
ஜப்பானில் உடல் பருமன் பிரச்சினை கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு அவர்கள் கடைப்பிடிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்களே காரணமாகும்.