டேஸ்டியான காளான் மினி சமோசா செய்வது எப்படி?





டேஸ்டியான காளான் மினி சமோசா செய்வது எப்படி?

0

காளான்கள் சிடின் மற்றும் பீட்டா - குளுக்கனின் நல்ல மூலமாகும், இது கொழுப்பை குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

டேஸ்டியான காளான் மினி சமோசா  செய்வது எப்படி?
பட்டன், சிப்பி, ஷிடேக், எனோகி, ஷிமேஜி, போர்டோபெல்லோ மற்றும் போர்சினி என உண்ணக்கூடிய காளான்கள் பல வடிவங்களில் உள்ளன. அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. 
துரதிர்ஷ்டவசமான உடலமைப்பு கொண்ட கழுதைப்புலி !

புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. 

இறுதியில் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. சரி இனி காளான் கொண்டு டேஸ்டியான காளான் மினி சமோசா  செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 1 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வெங்காயம் - 1

பட்டன் காளான் - 300 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்.

ரசிகர்களை கிறங்கடித்த தெய்வமகள் வாணி போஜன் !

செய்முறை :

டேஸ்டியான காளான் மினி சமோசா  செய்வது எப்படி?

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். காளாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக வதக்கியவுடன், காளான், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

காளான் நன்றாக வெந்தவுடன் அதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். 

அலங்காரத்தை விரும்பும் ஆண்களுக்கான ரகசியங்கள் !

பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 

இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் சமோசாக்களாக செய்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் மினி சமோசா ரெடி!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)