டர்னிப் கிழங்கினை வாங்கும் முறை எப்படி? தெரியுமா? உங்களுக்கு !





டர்னிப் கிழங்கினை வாங்கும் முறை எப்படி? தெரியுமா? உங்களுக்கு !

0

டர்னிப்பின் தாவரவியல் பெயர் ப்ராசிகா ரப்பா (Brassica rapa). Brassicaceae என்கிற கடுகு குடும்பத்தைச் சேர்ந்தது என்று வகைப் படுத்துகி றார்கள் தாவரவிய லாளர்கள்.

டர்னிப் கிழங்கினை வாங்கும் முறை எப்படி? தெரியுமா? உங்களுக்கு !

டர்னிப்பின் கிழங்கும், இலைகளும் அதிக சத்துக் களைக் கொண்டுள்ளது. ஆசியா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் டர்னிப்பின் இலைகளும் உண்ணப் படுகின்றன.

கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகங்களில் இக்காய் பயன்பாட்டில் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. டர்னிப் ஈராண்டுகள் வாழும் தாவர வகையைச் சார்ந்தது.
முதல் ஆண்டில் ஸ்டார்சினை தனது வேர்ப் பகுதியில் சேகரித்து வைத்துக் கொள்கிறது. இரண்டாவது ஆண்டில் மஞ்சள் நிற உயரமான பூக்களைத் தோற்று விக்கிறது.

பின் அதிலிருந்து பட்டாணியைப் போன்ற காயினைக் காய்த்து விதைகளை உற்பத்தி செய்கிறது. விதைகள் உற்பத்திக்குப் பின் இச்செடியானது மடிந்து விடுகிறது.

டர்னிப்செடியானது வளரும் போது ஏழு மாதத்திற்கு மேல் குளிர்காலம் வந்தால் செடியானது முழுவதுமாக பிடுங்கப்பட்டு இலைகள் வாடாமல் பாதுகாக்கப் படுகிறது.
பின் வசந்த காலத்தில் மீண்டும் நடப்பட்டு விதைகள் உற்பத்தி செய்யப் படுகிறது. டர்னிப்பின் மேல் தோலானது அடிப்புறத்தில் வெள்ளை நிறமாகவும், மேற் புறத்தில் வைலட் நிறமாகவும் காணப்படுகிறது.

டர்னிப் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய காய் ஆகும். எனினும் அக்டோபர் முதல் மார்ச் வரை அதிகளவு கிடைக்கிறது.

டர்னிப் கிழங்கினை வாங்கும் போது புதிதாகவும், விறைப்பாகவும், அளவில் சிறியதாகவும், கையில் தூக்கும் போது கனமானதாகவும் இருக்குமாறு வாங்க வேண்டும்.
அளவில் பெரிய, புள்ளிகளுடன் காயம்பட்ட கிழங்குகளைத் தவிர்க்கவும். பைகளில் இக்காயினை வைத்து குளிர்பதனப் பெட்டியில் சில வாரங்கள் வைத்திருந்து பயன் படுத்தலாம்.

டர்னிப்பினை பயன்படுத்தும் போது நன்கு கழுவி மேல்புற தோலினை நீக்கி பயன்படுத்தப் படுகிறது. டர்னிப்பினை அப்படியேவோ சமைத்தோ உண்ணலாம். 

ஊறுகாய்கள், சாலட்டுகள் தயார் செய்ய இக்காய் பயன்படுகிறது. உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் ஏற்பட்டு வருவதால், மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் அதிக அளவில் பரவி வருகிறது. 
எனவே, இத்தனை நலன்களை உள்ளடக்கி இருக்கும் டர்னிப்பினையும் நாமே விளைவித்து, செயற்கை பூச்சி கொல்லிகளால் நாம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நோய்களிலிருந்து தப்பித்து நலமாக வாழலாம்!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)