தேவையானவை:
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
கொத்தமல்லித் தழை - 2 டேபிள் ஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 5
பிரிஞ்சி இலை - ஒன்று
பட்டை - ஒரு சிறு துண்டு
அன்னாசிப்பூ - 1
மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
ஆர்டர் செய்த உணவு கேன்சல் எதற்காக - சொமட்டோ பதிலடி !
செய்முறை:.
நோய்களை மாயமாக்கும் தேங்காய் மாயா ஜாலம் !
இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, நீளமாகக் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும்.
கொத்தமல்லித் தழை, புதினா இலைகளையும் சேர்த்து இலைகள் சுருங்கும் வரை வதக்கவும். தேவையான உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
வதக்கிய கலவையுடன் கொத்துக்கறியைச் சேர்த்து நன்றாகக் கிளறி, 2 நிமிடங்கள் வதக்கவும். 2 கப் தண்ணீர் விட்டு குக்கர் மூடி, வெயிட் போட்டு, 12 நிமிடங்கள் சிறுதீயில் வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.
ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம் !
கிரேவியாக வந்ததும் இறக்கி சூடாகப் பரிமாறவும். பரோட்டா, சப்பாத்தி, பூரி, தோசை, சாதம் என அனைத்துக்கும் ஏற்ற சுவையான சைட்டிஷ் இது.