காலிபிளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது.
ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !
இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேர விடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.
சரி இனி காலிபிளவர் கொண்டு சுவையான காலிபிளவர் தண்டு ஊறுகாய் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:
காலிபிளவர் தண்டுகள் – ஒரு கப்
மிளகாய்த் தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கடுகுப் பொடி – ஒரு டீஸ்பூன்
வெந்தயப் பொடி – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – அரை கப்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார்கள்
செய்முறை:
காற்றுப் புகாத ஜாடியில் காலிபிளவர் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
ஹோட்டலில் நண்பனை கொன்ற இளைஞர் - கழுத்தறுத்த காதலன் !
ஆறிய பிறகு பூண்டுக் கலவையை ஊறிய காலிபிளவருடன் சேர்த்துக் கலக்கவும். தேவையானால் மேலும் சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
இதை மூடி, ஃப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம்.