உணவு அல்லாத பொருட்களை எல்லாம் உணவு எனச் சொல்லிக் கொண்டு இருப்பதாலும், சூப்பர் மார்க்கட்டுகளில் விற்கப்படும்
அது தவிர தம் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை என்பதைக் காட்ட இக்கம்பனியினர் சீரியலில் வைட்டமின்களை கலந்து ஹார்ட் ஹெல்தி (heart healthy) எனச் சொல்லி விற்று வருகிறார்கள்.
கொக்கோகோலா கம்பனி ஒரு படி மேலே போய், தண்ணீரை விட ஆரோக்கியமான பானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
அப்பேர்ப்பட்ட மாய மந்திர பானம் என்ன எனக் கேட்கிறீர்களா? வைட்டமின் வாட்டர் தான். நீரில் சிந்தடிக் வைட்டமின்களையும்,
ஸ்ப்ளெண்டா மாதிரி செயற்கை சர்க்கரைகளையும், பிரசர்வேடிவ்களையும் கெமிக்கல்களையும் கலந்தால் வைட்டமின் வாட்டர் தயார்.
சேது பந்த சர்வாங்காசனம் எப்படி செய்வது?
இதனுடன் சாதா குழாய் நீரால் சந்தையில் போட்டியிட முடியுமா?வைட்டமின், மினரல்களுக்குப் பயன்படும் மூலப் பொருட்கள் பலவும் உடலால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கெமிக்கல் குப்பைகள்.
அவை பெயரளவுக்குத் தான் வைட்டமின், மினரல்கள். உதாரணமாக நார்ச் சத்து (பைபர்) மாத்திரைகளை எடுத்துக் கொள்வோம்.
இன்றைய நாகரிக சமூகத்தின் காலரி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வெள்ளை அரிசி, மைதாவில் எல்லாம் நார்ச் சத்து இல்லை. காய்கறிகளை நாம் உண்பதும் இல்லை.
அதனால் மருத்துவர்களிடம் போனால் அவர்கள் நார்ச்சத்து மாத்திரை சாப்பிடு எனச் சொல்லி பெனிபைபர் மாதிரி குப்பைகளை உண்ணச் சொல்லிப் பரிந்துரைப்பார்கள்.
இப்போது சில ரொட்டி கம்பனிகள் எங்கள் ரொட்டியில் இரு மடங்கு அதிக நார்ச் சத்து உள்ளது எனச் சொல்லி விளம்பரம் செய்து வருகின்றன.
செல்லுலோஸ் எளிதில் நீரில் கரைந்து விடும் என்பதால் இது நார்ச் சத்தாகப் பயன்படுகிறது.
அத்துடன் கலர்களையும் கெமிக்கல்களையும் செயற்கை இனிப்புகளையும் கலந்தால் பைபர் சப்ளிமெண்ட் ரெடி. ஆனால் செல்லுலோஸ் எதில் இருந்து எடுக்கப்படுகிறது?
பஞ்சு, மரப் பட்டை முதாலானவற்றில் இருந்து. காய்கறிகளிலும் பழங்களிலும் இருந்தும் செல்லுலோஸை எடுக்கலாம். ஆனால் அதிக விலை காரணமாகக் கம்பனிகள் அத்தவற்றைச் செய்வது கிடையாது.
நீங்கள் உண்ணும் பைபர் சப்ளிமெண்ட் மரப் பட்டையில் இருந்தும், பஞ்சில் இருந்தும் வந்திருக்கும் வாய்ப்பே அதிகம்.
இப்பேர்ப்பட்ட செல்லுலோஸை ஜீரணம் செய்யும் சக்தி படைத்த ஒரே உயிரினம் மாடுகளும் எருமைகளும் மட்டுமே.
சுப்த பாதாங்குஸ்தாசனம் எப்படி செய்வது?
அவற்றுக்கு ஆறு வயிறுகள் இருப்பதால் செல்லுலோஸை ஆறு வயிறுகளிலும், மறுபடி மீண்டும்
வாய்க்கும் கொண்டு வந்து மணிக்கணக்கில் அசை போட்டும் கஷ்டப்பட்டு அவற்றால் ஜீரணம் செய்ய இயலும்.
ஆனால் செல்லுலோஸை ஜீரணம் செய்யும் சக்தி மனிதனுக்கு மட்டுமல்ல வேறு எந்த உயிர்னத்துக்கும் கிடையாது.
எப்.டி.ஏ (அமெரிக்க உணவுப் பொருள் கழகம்) வலைத் தளத் தகவல்படி மனிதர்கள் உண்ணும் 100% செல்லுலோஸும்
இப்படி வயிற்றின் வழியாக முழுமையாக வெளிவந்தாலும் செல்லுலோஸ் மலத்தின் அளவைக் கூட்டுவதால் நிறைய மலம் கழிகிறது என
வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பைபர் சப்ளிமெண்ட் விற்பனையும் தூள் பறக்கும்.
வைட்டமின் மாத்திரைகளின் தன்மை என்ன, வைட்டமின்களின் தன்மை என்ன என்பதும் பொது மக்களுக்குப் புரிவது கிடையாது.
உதாரணமாக வைட்டமின் டி மாத்திரை உட்கொள்ளும் பலரும் அதில் என்ன வகை வைட்டமின் உண்டு என்பதைப் பார்ப்பது கிடையாது. வைட்டமின் டியில் இருவகை உண்டு டி2, டி3.
ஸ்வஸ்திகாசனம் எப்படி செய்வது?
சூரிய ஒளியில் நின்று உடலுக்குக் கிடைப்பது டி3. இதுவே பல்லுக்கும், எலும்புகளுக்கும் நன்மையளிப்பது. டி2 என்பது தாவரங்களில் கிடைக்கும் பலனற்ற வைட்டமின்.
அதை உண்பதால் எந்த நன்மையும் கிடையாது. ஆனால் இதன் விலை குறைவு என்பதால் கம்பனிகள் டி2வைத் தான் மாத்திரை வடிவில் விற்கிறார்கள்.
கடைக்கு போய் வைட்டமின் டி வேண்டும் என கேட்டு வாங்கும் பலரும் அதில் இருப்பது டி2 ஆ இல்லை டி3ஆ என்பதைப் பார்ப்பது கிடையாது.
விளைவாக வைட்டமின் டி சாப்பிட்டும் ஏன் எனக்கு பல், எலும்புகளில் சிக்கல் வருகிறது எனக் குழம்பிவிடுவார்கள்.
ஒரு வருடம் தொடர்ந்து பி6 வைட்டமின் மாத்திரை உண்டு வந்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை செய்கிறது.
அத்துடன் இந்த மாத்திரை ஆஸ்துமா, டிபி மருந்துகளுடன் கடுமையாக வேதிவினை புரிந்து அவர்களின் நரம்பு செல்களைக் கடுமையாகத் தாக்கி முடமாக்கி விடும்.
இயற்கையாக உணவின் மூலம் நீங்கள் பி6 வைட்டமினை எத்தனை அதிக அளவில் உட்கொண்டாலும் இந்தச் சிக்கல் கிடையாது.
வெர்டிகோ தலைசுற்றலை தடுக்கும் 5 யோகா பயிற்சிகள் !
கெமிக்கல் குப்பைகளுக்கே உடல் இந்த அளவு கடுமையான பின்விளைவுகளைக் காட்டுகிறது.
வைட்டமின் ஈ, இன்னொரு முக்கிய வைட்டமின். ஆண்மையை அளிக்கும் சக்தி வாய்ந்தது, பெண்களுக்குக் கருப் பிறப்பை உறுதி செய்யும் வைட்டமின்.
தோல், முடி ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் நல்லது. ஆனால் இத்தனை நன்மைகளை அளிக்கும் இந்த வைட்டமினை சப்ளிமெண்டாக
அதிக அளவில் உட்கொள்வது மரண விகிதத்தை அதிகரிக்கும் என மேயோ கிளினிக் எச்சரிக்கை செய்கிறது. மேயோ கிளினிக், அமெரிக்காவின் நம்பர் ஒன் மருத்துவமனையாகும்.
இதே வைட்டமின் ஈயை இயற்கையான உணவுகள் மூலம் எத்தனை அதிக அளவில் உட்கொண்டாலும் எக்கெடுதலும் உடலுக்குக் கிடையாது.
காம்ப்ளான், ஹார்லிக்ஸ் குடித்து காலையில் சீரியல் சாப்பிட்டு ஒரே ஒரு மல்டி வைட்டமின் மாத்திரை சாப்பிட்டால் ஓவர்டோஸ் ஆகிவிடும் வாய்ப்பு உண்டு.
பேலியோ டயட் என்றால் என்ன?
ஆரோக்கியம் எனச் சொல்லி, உடலைக் கெடுத்துக் கொள்வதே இவற்றின் பலன். கம்பனிகளும் விற்பனையைத் தவிர எதையும் கண்டு கொள்வதில்லை என்பதும்
வாடிக்கையாளரும் சுவையைத் தவிர உணவில் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதும் இந்த நிலைக்குக் காரணம் ஆகி விடுகிறது. ods.od.nih.gov/factsheets
செய்திதாளில் உணவு பொருட்களை சாப்பிடுவது ஆபத்து ! 04/03/2019 ஊட்டச்சத்து பானங்கள் நம் உயரம் கூட்டுமா? 13/12/2018