மீன் குழம்பு, மீன் வருவல், மீன் கட்லெட், மீன் சூப் சாப்பிட்டு இருக்கலாம். மீன் ஐஸ்கிரீம், மீன் நூடுல்ஸ் சாப்பிட்டது உண்டா? இனி ஆரோக்கியமான இந்த ஐஸ்கிரீம், நூடுல்ஸ்களையும் சாப்பிடலாம்.
இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய மீன்வளத் தொழில் நுட்பக் கழகம் இதை உருவாக்கி உள்ளது.
மீன்களின் புரதத்தில், மனிதர்களுக்கு தேவையான அனைத்து வகை அமினோ ஆசிட்கள் இருப்பதால், சத்தான உணவாக உள்ளது. இதில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களும் அதிகமாக உள்ளது.
மீன்களின் புரதத்தில், மனிதர்களுக்கு தேவையான அனைத்து வகை அமினோ ஆசிட்கள் இருப்பதால், சத்தான உணவாக உள்ளது. இதில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களும் அதிகமாக உள்ளது.
மீன் ஐஸ்கிரீம் :
மீன்களை பயன்படுத்தி பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிதாக மீன் ஐஸ்கிரீம் மற்றும் மீன் நூடுல்ஸ் தயாரிக்கப்பட உள்ளன.
மீன் ஐஸ் கிரீமுக்கு, மாரிகிரீம் என்று பெயரிடப் பட்டுள்ளது. வேக வைக்கப்பட்ட மீனுடன், நீர், சர்க்கரை, வெண்ணெய், முட்டை, தேவையான பிளேவர் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு, மாரிகிரீம் தயாரிக்கப் படுகிறது.

இவை அனைத்தும் ஒன்றாக சேர்க்கப்பட்டு நன்றாக கலக்கப்பட்டு, பசை போல ஆக்கப் படுகிறது. இக்கலவை பால் பதத்துக்கு வந்தவுடன், மைனஸ் 20 டிகிரியில் உறைவிக்கப் படுகிறது.
மீன்களில் இருந்து நூடுல்ஸ் :
மீன்களில் இருந்து நூடுல்ஸ் :
இதன் பின்னர், பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு, விற்பனை செய்யப் படுகிறது. மீன் ஐஸ்கிரீம் களில் மீன் வாசனை இருக்காது. ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு முன்பே, மீன் வாசனையை போக்கும் வகையில் தொழில் நுட்பங்கள் பின்பற்றப்படும்.
இந்த ஐஸ்கிரீம்கள் மற்றவற்றை போல, சுவையாக இருப்பதோடு, சத்தான உணவாகவும் இருக்கும். இதே போல, மீன்களில் இருந்து நூடுல்ஸ் தயாரிக்கப் படுகிறது. சிறிய வகை எலும்பு மீன்கள் பொடியாக்கப் படுகின்றன.
அதன் பின்னர், இவை வழக்கம் போல, நூடுல்ஸ் தயாரிக்கப்படும் பொருட்களுடன் கலக்கப் படுகின்றன. வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் தொழில் நுட்பங்களைப் போலவே, நூடுல்ஸ் தயாரிக்கப் படுகின்றன.
சிறிய ரக மீன்களில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம். எனவே, இந்த நூடுல்ஸ் வகையும் சத்தான உணவாக இருக்கும்.