சுவையான பால் கொழுக்கட்டை ரெசிபி செய்வது எப்படி?





சுவையான பால் கொழுக்கட்டை ரெசிபி செய்வது எப்படி?

மாட்டுப்பால் ஒரு சரிவிகித உணவு. இதில் நமக்கு தேவையுள்ள வைட்டமின்கள், புரோட்டின், கொழுப்பு சரியாக கிடைக்கும். எளிதில் ஜீரணம் ஆகும்.
சுவையான பால் கொழுக்கட்டை ரெசிபி செய்வது எப்படி?
அதனாலேயே சிறு குழந்தைகளுக்கு பால் முதலாவதாக பரிந்துரைக்கப்படுகிறது. எருமை பாலில் பசுவின் பாலை விட கால்சியம் மற்றும் புரதம் அதிகம் உள்ளது, 

மேலும் கொழுப்பு மற்றும் சோடியம் குறைவாக உள்ளது. ஆரோக்கியமான எலும்புகள், பல் ஆரோக்கியம் மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு எருமை பால் சிறந்தது.  
எருமை பால் க்ரீமியர் மற்றும் தடிமனாக இருப்பதால் பன்னீர், கீர், குல்பி, தயிர், நெய் போன்ற கனமான பொருட்களை தயாரிக்க பயன்படுத்தலாம். சரி இனி பால் கொண்டு சுவையான பால் கொழுக்கட்டை ரெசிபி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை :.

பச்சரிசி - ஒரு கப்

பால் - ஒரு கப்

சர்க்கரை - தேவைக்கு

தேங்காய்ப்பூ - 1/2 டீஸ்பூன்

குங்குமப்பூ - 10 இதழ்கள் (விருப்பமானால்))

ஏலக்காய் - 1

உப்பு - துளிக்கும் குறைவாக‌

செய்முறை:
சுவையான பால் கொழுக்கட்டை ரெசிபி செய்வது எப்படி?
பச்சரிசியை ஊற வைத்து, வடிகட்டி, மாவாக இடித்து, இட்லிப் பானையில் வைத்து அவித்து,ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.

பிறகு அதில் துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து,சிறிது சிறிதாக warm water சேர்த்து கொழுக்கட்டை மாவு / இடியாப்ப மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பிறகு சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும். சிறிய அளவில் மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து முதலில் க்ளாக் வைஸாக உருட்டி, பிறகு நேராக உருட்டினால் வந்து விடும். 

முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.பிறகு எளிதாகி விடும். இவ்வாறு உருட்டியவற்றை இட்லிப் பானையில் வைத்து அவிக்கவும். இது சீக்கிரமே வெந்து விடும்.

இதற்கிடையில் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து காய்ச்சவும்.காய்ந்ததும் சர்க்கரை,குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.மிதமானத் தீயில் வைக்கவும்.
இப்போது வெந்த,சூடான‌ கொழுக்கட்டைகளை எடுத்து சூடான பாலில் போட்டு கலக்கி விடவும். ஒரு 5 நிமி கழித்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இப்போது தேங்காய்ப்பூ,பொடித்த ஏலக்காய் சேர்க்கவும்.
கொழுக்கட்டை பாலில் வெந்து, ஊறி சுவையாக இருக்கும். சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ ஒரு பௌளில் எடுத்து ஸ்பூனால் சாப்பிடலாம்.
Tags: