நம்மில் பலரும் காலையில் எழுந்தவுடன் முதலில் குடிக்க விரும்புவது காபி தான். அதிலும் சிலர் பெட் காபி குடித்த பிறகு தான் மற்ற பணிகளை செய்ய தொடங்குவர்.
நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குவது வரை காபி நன்மை செய்கிறது.
அதனால் தான் மக்கள் இதை விரும்புகிறார்கள். பல ஆய்வுகள் காபி குடிப்பதற்கும் ஆயுள் நீடிப்பதர்க்கும் நேரடியான தொடர்பை குறிப்பிடுகின்றன.
சுவையான வாத்துக்கறி பிரியாணி செய்வது எப்படி?
காபி என்பது நாம் தினமும் உட்கொள்ளும் காப்ஃபைன் அளவிலான இன்றியமையாத பழக்கப் பொருள் ஆகும்.
ஒருவர் மன அழுத்தம் அடைந்தாலோ, தளர்வடைந்தாலோ, அவ்வேளையில் அவருக்கு தேவைப்படுவது ஒரு கப் காபி மட்டுமே.
காபி நமது மனநிலைகளை உயர்த்துவதால் எனர்ஜி பூஸ்டர்ஸ் என்றும் அழைக்கப் படுக்கின்றது.
இதன் உற்பத்தி தொடக்கத்தை பற்றி கூறுகையில், காபியானது ரோஸ் நிறமுள்ள சிவப்பு பெர்ரி மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப் படுகின்றது.
வெவ்வேறு வகையான காபி கொட்டைகள் அந்தந்த இடங்களுக்கு தகுந்தாற் போல் பயிர் செய்யப்படுகின்றது. ஒவ்வொரு வகையான காபி கொட்டைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காபி வகைகளை தயாரிக்க உதவுகின்றது.
காபியின் வகைகள் அதில் சேர்க்கும் பொருட்களாலும், அதன் வெவ்வேறு வேறுபாடுகளாலும் வேறுபட்டு இருக்கும். காபியின் மணத்தையும், சுவையையும் மிகை படுத்துவதற்கு இந்த பொருட்கள் உபயோகிக்கப் படுகின்றது.
இந்தியன் பில்டர் காபி (Indian Filter coffee)
காய்ந்த காபி பொடியில் கிடைக்கும் சாற்றை பால் மற்றும் தண்ணீருடன் கலந்து தயாரிக்கப்படுக்கின்றது. இது எல்லா வகை காபிக்களை காட்டிலும் இனிப்பாக இருக்கும்.
சுவையான மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி?
எஸ்ப்ரசோ மாச்சியாடோ காபி (Espresso Macchiato)
எஸ்ப்ரசோ காபியில் சிறிது நீராவியில் வைத்த பாலை சேர்த்தால், இந்த பிரபலமான வகையான எஸ்ப்ரசோ மாச்சியாடோ தயாரிக்கலாம்.
மாச்சியாடோ என்பது எஸ்ப்ரசோ காபியில் சிறிதளவு மாற்றி அமைக்கப்பட்ட வடிவமாகும். ஸ்ட்ராங் காபியை விரும்பாதவர்களுக்கு இது மிகவும் சிறந்த காபியாகும்.
மோக்கசினோ காபி (Mocha chino)
சுவையான முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்வது எப்படி?
காப்பசீனோ காபி (Cappuccino)
காப்பசீனோ காபி மிகவும் பிரபலமான, எளிதாக கிடைக்கக்கூடிய உலகளாவிய காபி வகைகளில் ஒன்றாகும். இது எல்லா காபி கடைகளிலும் கிடைக்க கூடிய காபி வகையாகும்.
இது எஸ்ப்ரசோ, பால், பால் நுரை போன்றவற்றை சமமமான அளவில் சேர்த்து தயாரிக்கப்படுக்கின்றது. சாக்லேட் சிரப் அல்லது காபி பவுடர் கொண்டு அலங்கரிப்படுக்கின்றது.
காபி லட்டே (Cafe Latte)
இந்த காபியை எஸ்ப்ரசோவில் சேர்க்கும் பாலை விட மூன்று மடங்கு அதிக பால் சேர்த்து தயாரிக்கின்றனர்.
இந்த பால் காபியில் தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து தயாரித்தால் குக்கீஸ் அல்லது பேஸ்டிரீஸ் போன்றவற்றோடு குடிப்பதற்கு சிறந்த பானமாக இருக்கும்.
எந்த உணவை ஃபிரிட்ஜில் வைக்கலாம்?
அமெரிக்கானோ காபி (America-no)
எஸ்ப்ரசோ காபியில் அரை கப் வெந்நீர், சிறிது பால் மற்றும் சர்க்கரை சேர்த்து இந்த காபியை தயாரிக்கலாம்.
அமெரிக்கர்கள் இந்த எஸ்ப்ரசோ காபியை நீர்ப்பதால் இதற்கு அமெரிக்கானோ என்ற பெயர் வந்தது. இது உலகம் முழுவதும் கிடைக்கக் கூடிய பிரபலமான காபி வகையாகும்.
ஐரிஷ் காபி (Irish coffee)
இது எல்லா காபி கடைகளிலும் கிடைக்கக்கூடிய மற்றொரு காபி வகையாகும். சிறந்த ஐரிஷ் காபியை தயாரிப்பதற்கு விஸ்கி, எஸ்ப்ரசோ மற்றும் சர்க்கரையை சரியான அளவில் கலக்க வேண்டும்.
டர்கிஷ் காபி (Turkish coffee)
டர்கிஷ் கொட்டைகளை காய வைத்து நன்றாக பொடி செய்ய வேண்டும். இதனை வெந்நீரில் சேர்த்து கரைக்கவும்.
இந்த காபி பவுடர் கலந்த தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும். காபியின் சுவை மெருகேறி தண்ணீரால் முழுவதுமாக ஈர்க்கப்பட வேண்டும்.
தேவையான சர்க்கரை சேர்த்து தயாரிக்கவும். சிறந்த டர்கிஷ் காபியில் நுரை படிவம் தடிமனாகவும் கிரீமியாகவும் இருக்கும்.
புற்றுநோயை தவிர்க்க சாப்பிட கூடாத உணவுகள் !
வெள்ளை காபி (White coffee)
மலேசியாவில் தயாரிக்கப்பட்ட இந்த காபி பிரபலமான ஒன்றாகும். கடலை எண்ணையில் வறுத்த காபி கொட்டைகளை கொண்டு தயாரிக்கப் படுக்கின்றது.
இந்த காபிக்கு சுவையூட்ட சுண்டிய பால் மற்றும் சர்க்கரை போன்றவற்றை உபயோகப் படுத்தலாம்.
எஸ்ப்ரசோ காபி (Espresso)
காபி கொட்டைகளை அதிக பிரஷர் நீராவியில் வைத்து இந்த கருப்பு காபியை தயாரிக்கின்றனர். இது மிகவும் அடிப்படையான காபி வகையாகும். இருப்பினும், பிரபலமான காபி வகையாகும்.
தேனில் ஊற வைத்த பூண்டின் நன்மைகள் !
எஸ்ப்ரசோ காபியில் தண்ணீரும் சிறிதளவு சர்க்கரையும் இருக்கும். ஸ்ட்ராங் எஸ்ப்ரசோ காபியில் குறைவான தண்ணீரும் சர்க்கரை இல்லாமலும் இருக்கும். இது எல்லோரும் விரும்பும் காபி வகைகளில் ஒன்றாகும்.
காப்பசீனோ ஒரு சிறந்த காபி
ReplyDelete