பெண்களுக்குத் தேவையான சத்துக்களை எல்லா வகைக் கீரைகளும் வழங்கினாலும், கீரைகளின் ராணியாக இருப்பது முருங்கையே.
இலை, காய், பூ, பட்டை, பிசின், வேர் என இதன் அனைத்துப் பாகங்களும் பயன் தரக்கூடியவை.
ஒவ்வொரு பாகத்திலும் என்னென்ன சத்துகள் இருக்கின்றன... மருத்துவ குணம் என்ன என்பதைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறார், சித்த மருத்துவர் தி.வேணி.
முருங்கைக்காய்:
வாயகன்ற பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி, அதில் முருங்கைப் பிஞ்சை துண்டுகளாக வெட்டிப் போட்டு, வதக்கி, நீர் விட்டு,
சிறிதளவு மிளகு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டி, தேவையான அளவு உப்புப் போட்டு, தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடல் வலுவாகும்.
செரிமான மண்டலத்தை நன்கு இயங்கச் செய்யும்.
முருங்கைப் பிசின் :
முருங்கைப் பிசினை ஒன்றிரண்டாகப் பொடித்து, நெய்யில் வறுத்துத் தூள் செய்த பொடியை, இரவு நேரத்தில் கொதிக்கும் நீரில் போட்டு,
அப்படியே வைத்திருந்து அதிகாலையில் அந்த நீரை வடித்துக் குடிக்க, நல்ல பலன் கிடைக்கும்.
இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !
முருங்கைப் பூ :
ஒரு டம்ளர் பாலுக்கு, 10-15 முருங்கைப் பூக்களைச் சுத்தம் செய்து போட்டு, நன்றாக வேகும் வரை கொதிக்க வைத்து, சிறிதளவு தேன் கலந்து பருகி வந்தால், கர்ப்பப் பை வலுவாகி கருமுட்டை உற்பத்தியைத் தூண்டும்.
மேலும் உயர் ரத்த அழுத்த நோயின் தீவிரத்தைக் குறைக்கும். நீரிழிவு நோயின் தன்மை குறையும்., மலச்சிக்கல் சீராகும்.
ஹீமோகுளோபின் கூடி, ரத்தச் சோகை நீங்கும். நரம்புகள் பலம் பெறும். முருங்கைக் கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள் விலகும்.
ஆங்கிலேயரை எதிர்த்த வீரன் திப்பு சுல்தானின் வரலாறு !
முருங்கை இலையை அரைத்து வீக்கங்களின் மேல் பற்றுப் போடலாம். சிறுநீர் சுலபமாகப் பிரிய, முருங்கைக் கீரையுடன் சீரகம் கால் ஸ்பூன்,
சிறிதளவு மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிக் குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
முருங்கை இலைகளை அரைத்துச் சாறு எடுத்து, சிறிது தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தாலும் வயிற்றுப் பூச்சிகள் அழியும்.
இலைச் சாற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால், பொடுகுத் தொல்லை போகும்.
முருங்கை இலை:
முருங்கைக் கீரையை நிழலில் உலர்த்தி, நன்றாகக் காய்ந்ததும் பொடி செய்து பாட்டிலில் சேர்த்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம்.
அப்படி சாப்பிட்டால், கண்ணில் உள்ள பார்வை நரம்புகள் பலம் பெரும். வயற்றுப்புண் குணமாகும், உடல் சூட்டைக் குறைக்கும்.
அருமையான ஜெல்லி கேக் செய்வது எப்படி?
பித்தம், இளநரையைப் போக்கும். தோல் மினுமினுப்பாகும். முருங்கை இலைச் சாற்றில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் உள்ள பருக்களின் மீது தடவி வந்தால், முகப்பரு சரியாகும்.
பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் முருங்கை இலைச் சாறு சிறிது சேர்த்து உட்கொள்ள, நெஞ்சுச் சளி சரியாகும்.
முருங்கைப்பட்டை :
144 மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல் !
இடுப்பு வலிக்கு முருங்கைப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடித்தால் வலி போகும். அதோடு, வயற்றில் உள்ள தேவை இல்லாத புழுக்களை அழிக்கும்.
நாம் உண்ணும் உணவையே நோய் தீர்க்கும் விதத்தில் அமைத்து கொள்வதே சிறந்தது.