சமீப நாட்களாக கோடை வெயில் மண்டையை பிளந்தது கொண்டிருக்கிறது. அதுவும் காலை 7 மணிக்கே வெயில் கொளுத்துவதால் வேலை, பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கொளுத்தி வரும் கோடை வெயில் பலருக்கும் அடிக்கடி நீரிழப்பு ஏற்படுவது மற்றும் ஆபத்தான பிற உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
உங்கள் வீட்டுக்கு வாங்கும் வீட்டுக் கடனை அடைப்பது எப்படி?
எனவே தான் கோடை மாதங்களில் ஆரோக்கியமாக இருக்க போதுமான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
உடலை ஹைட்ரேட்டாகவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும் சில சீசன் உணவுகளை இங்கே பார்க்கலாம்..
வெள்ளரி:
வெள்ளரிக்காயில் 95% தண்ணீர் உள்ளது மற்றும் ஒரு கப் வெள்ளரிக்காயில் இருக்கும் கலோரி எண்ணிக்கை 16 மட்டுமே. பகல் நேரத்தில் இதை சாப்பிடும் போது உடலை ஹைட்ரேட்டாக வைக்க உதவுகிறது.
வெள்ளரியை சாப்பிடும் போது அதன் தோலை அகற்றாமல் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
ஏனெனில் இதில் வைட்டமின் சி உள்ளது. முடிந்த போதெல்லாம் வெள்ளரி சாப்பிடுவது UVA / UVB கதிர்களால் ஏற்படும் ஸ்கின் கேன்சரை தடுக்க உதவுகிறது.
வீட்டுக்கு பட்ஜெட்டுக்குள் உலோக அலங்காரம் செய்ய !
தர்பூசணி:
வெள்ளரிக்கு அடுத்து கோடையில் கிடைக்க கூடிய பொதுவான ஒன்றாக இருக்கிறது தர்பூசணி. இது 92% தண்ணீரை கொண்டுள்ளது.
தர்பூசணி சாப்பிடுவது அதிகப்படியான வியர்வையை வெளியிட உடலை தூண்டுகிறது. இது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மாதுளை:
மாதுளம் பழத்தில் தண்ணீர் மற்றும் Punicalagins எனப்படும் ஸ்பெஷல் ஆன்டிஆக்சிடண்ட் நிறைந்துள்ளது
இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், வளர்சிதை மாற்றத்தை உருவாக்கவும் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நம்மை பாதுகாக்கவும் உதவுகிறது
சொந்த வீடு கட்டுவோர்க்கு முக்கிய யோசனைகள் !
புதினா:
நல்ல ஃபிரெஷ்ஷான புதினா இலைகள் menthol-ஐ கொண்டிருப்பதால் கோடையில் நன்மை பயக்கின்றன. புதினா நம்மை கூலாக உணர அனுமதிக்கும் சிறப்பு நரம்பு முனைகளை (nerve endings) தூண்டுகிறது.
இதனால் ஏற்படும் எலெக்ட்ரிக்கல் இம்பல்ஸ் மூளைக்குச் சென்று வெளியில் குளிர்ச்சி இருப்பதாக நம்ப வைக்கிறது.
கிவி:
கோடையில் கிவி பழத்தை வழக்கமாக எடுத்து கொள்வது நீர்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை உடலில் அதிகரிக்க உதவுகிறது.
மேலும் எலக்ட்ரோலைட் அளவையும் மேம்படுத்த உதவுகிறது. எனவே ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்க கிவி உதவுகிறது.
குற்றவாளியிடம் குழந்தையை கொடுத்த பெண், பிரீஸரில் அடைத்த காதலன் !
செலரி:
இது தமிழில் சிவரிக்கீரை என்று குறிப்பிடப்படுகிறது.இதில் 96% தண்ணீர் உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்களின் வளமான ஆதாரமாக உள்ளது.
மேலும் இது எலக்ட்ரோலைட்ஸ் அளவை உடலில் மேம்படுத்துவதால் ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கிறது.
ஸ்னோ பீஸ் (பனி பட்டாணி) : உடலை ஹைட்ரேட்டாக வைக்க உதவுவதை தவிர இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.
பேரிக்காய் :
பேரிக்காயில் கரைய கூடிய நார்ச்சத்து (soluble fibre ) நிறைந்துள்ளது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க மற்றும் வெப்ப பக்க வாதத்திலிருந்து பாதுகாக்க பேரிக்காய் மியாகவும் உதவியாக இருக்கிறது.
மாம்பழம்:
கோடை சீசனில் மக்களால் விரும்பி சாப்பிடப்படும் சுவை மிகுந்த கனியான மாம்பழத்தில் 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளன.
மாம்பழத்தில் புரொட்டின்ஸ், வைட்டமின்கள் ஏ, பி6, சி, இரும்பு, ஃபோலேட், மெக்னீசியம், ரைபோஃப்ளேவின் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய இருக்கிறது.
பாம்பு போல வளர்ந்த கற்றாழை.. அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள் !
மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சருமத்திற்கு உகந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த பழம் குளிர்ச்சியான பண்புகளை கொண்டிருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்க உதவும்.
மர ஆப்பிள் (wood apple):
வெப்ப காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானம் தொடர்பான பிற பிரச்சனைகளுக்கு இந்த கோடைகால பழம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
செரிமானத்தை மேம்படுத்த, மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.