கொரியர்கள் எப்போதுமே பாரம்பரியத்தை நேசிக்க கூடியவர்கள். எனவே தான் முன்னோர்களின் முறைப்படி அரிசி தண்ணீரை சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
கொரியாவில் உள்ள பெண்களில் பெரும்பாலானோர் நமது சருமத்தின் அழகு மற்றும் கூந்தல் பராமரிப்பு போன்றவற்றிற்கு ரைஸ் வாட்டர், அதாவது அரிசி தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.
கொரியர்கள் கண்ணாடி போல் ஜொலி, ஜொலிக்கும் சருமத்திற்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். அவர்கள் எப்போதும் தங்களது சருமத்தை பராமரிப்பதில் அதிக கவனம் கொண்டவர்கள்.
அதற்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து காஸ்மெட்டிக் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி குவிப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது.
சுலபமான முறையில் செய்யக்கூடிய காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி?
அரிசி தண்ணீரால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:
சருமத்தை மென்மையாக்கும்: சென்சிடிவ் சருமத்திற்கு அரிசி தண்ணீர் சிறப்பானது. இது முகப்பரு, எரிச்சல் மற்றும் பிற தோல் அழற்சிகளுக்கு சிகிச்சையளிப்பதாக கூறப்படுகிறது.
எனவே தான் இது சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு சரியான தீர்வாக உள்ளது.
மஞ்சள் தூளில் செய்யப்படும் கலப்படம் அறிந்து கொள்ள?
துளைகளைக் கட்டுப்படுத்தும்: முகத்தில் உள்ள சரும துளைகள் திறந்து கொள்வதை சரி செய்ய அரிசி தண்ணீர் டோனராக செயல்படுகிறது.
இது திறந்துள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கு, மாசுக்கள், இறந்த செல்களை நீக்குவது, புது செல்கள் உற்பத்தியாவதை ஊக்குவிப்பது போன்ற செயல்களைச் செய்கிறது.
பிரகாசிக்கும் சருமம்:
முகப்பரு அல்லது சீரற்ற சரும நிறம் கொண்டவர்களுக்கு புளிக்கவைக்கப்பட்ட அரிசி தண்ணீர் மிகவும் பயனுள்ளது.
இது உங்கள் சருமத்தில் கொலாஜன் உருவாவதை அதிகரித்து, மிருதுவான, பொலிவான நிறத்தை உங்களுக்கு வழங்கும். தவிர, முகத்தில் படிந்துள்ள கறைகள், தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது.
வயதாகும் தோற்றத்தை எதிர்க்கும்:
அரிசி தண்ணீரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகமாக உள்ளன, எனவே அவை சருமத்தில் தோன்றும் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மீது செயல்பட்டு, வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.
புற ஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பு:
கொரியர்களுக்கு சூரியனின் புற ஊதா கதிர்களின் தாக்குதலில் இருந்து சருமத்தை காக்கும் இயற்கையான சன்ஸ்கிரீனாக அரிசி தண்ணீர் பயன்படுகிறது.
இங்கிலாந்தின் பாதாள நகரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இது தவிர சூரிய வெப்பத்தால் சருமத்தில் ஏற்படும் கொப்புளங்கள், எரிச்சல், வெடிப்புகள் ஆகியவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.