முட்டை விரும்பிகள் அதிகம் விரும்பி உண்ணும் இந்த முட்டை மசாலாக்கள் வட மாநிலங்களில் ரொம்பவே பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது.
ரொம்பவே சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான Egg Bhurji எப்படி தயாரிப்பது? என்று பார்ப்போம்.
சமையல் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 2,
உப்பு - தேவையான அளவு,
தக்காளி - 2,
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
முட்டை - 3.
மார்க்கெட்டில் கண்களைக் கவரும் கேரட் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் !
செய்முறை : .
எந்த பொருட்களை உணவில் சேர்த்தால் நல்ல தூக்கம் வரும் !
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.
எண்ணெய் நன்கு காயும் பொழுது தாளிக்க சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சீரகம் பொரிந்ததும் தோல் உரித்து சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காய துண்டுகளை சேர்த்து நன்கு வதக்குங்கள்.
வெங்காயம் வதங்கியதும் அதில் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி மசிய வதங்கியதும் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் அதனுடன் வாசத்திற்கு கொஞ்சம் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள்.
இராணுவமே இல்லாத நாடுகள் மற்றும் எதற்காக இராணுவம் தேவைப்படவில்லை?
பின்னர் 2 பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து மசாலா கலவையை நன்கு வதக்கி விடுங்கள்.
எல்லாவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி விடுங்கள். முட்டையை ஊற்றியதும் இடைவிடாமல் மசாலாவுடன் சேர்த்து நன்கு கிண்டி கொண்டே இருங்கள்.
இதன் மீது நறுக்கிய மல்லித்தழை தூவி அப்படியே ஒரு பிரட்டு பிரட்டி இறக்கினால் அடடா என்று சொல்லிக் கொண்டே சாப்பிடலாம், அவ்வளவு ருசியாக இருக்கும்.
வெஜிடபிள் லாலிபாப் (Vegetable Lollipop)
முட்டை விரும்பிகள் கட்டாயம் இது போல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, அடிக்கடி செஞ்சு சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க.