சுவையான சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி?





சுவையான சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி?

0

உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது. உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். 

சுவையான சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி?
அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்படுவதை முற்றிலும் தடுத்து முக அழகை கூட்டுகிறது. 

உருளைக்கிழங்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தோற்றத்தை அதிகரிக்கிறது. நார்ச்சத்து ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. 

சுவையான காரசாரமான மட்டன் லெக் பீஸ் ரெசிபி செய்வது எப்படி?

அதே நேரம் பொட்டாசியம் ரத்தத்தில் பிராணவாயு கிரகிக்கும் தன்மையை அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் போன்ற குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. 

சரி இனி உருளைக்கிழங்கு கொண்டு சுவையான சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 300 கிராம்

உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்தது)

பிரட் தூள் - 2 மேஜைக்கரண்டி

வெங்காயத் தாள் - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லித் தூள் (தனியா) - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

மைதா மாவு - 3 மேஜைக்கரண்டி

கொத்தமல்லித் தழை - 3 மேஜைக்கரண்டி

எலுமிச்சை சாறு - 3 மேஜைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

சுவையான ஸ்பைசி மட்டன் தொக்கு செய்வது எப்படி?

செய்முறை :.

சுவையான சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி?

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத் தாள் சேர்த்து வதக்கி பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பின்னர் பச்சை மிளகாய், அனைத்து மசாலாக்களையும் சேர்க்கவும். 

சுவையான மஞ்சள் பூசணி பாயசம் செய்வது எப்படி?

பின்பு கரம் மசாலா தூள், உப்பு சேர்க்கவும். பிறகு சிக்கன் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வேக வைக்கவும். 

அவை பொன்னிறமாகும் வரை வைத்து பின் அதனுடன் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். பின்பு எலுமிச்சை சாறு சேர்க்கவும். வேகவைத்த உருளைக் கிழங்கை எடுத்து, அதனை நன்கு மசித்துக் கொள்ளவும். 

பின் அதனுடன் வதக்கிய மசாலாவை சேர்த்து, அவற்றை கையால் நன்கு பிசைந்து அதனுடன் பிரட் தூள்களை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதிலிருந்து சிறிய பகுதி எடுத்து அதனை பந்து போன்று உருட்டிக் கொள்ளவும். அதனை தட்டையாக்கவும். பின்பு மைதா மாவுடன் சிறிது நீா் சேர்த்து நன்கு கலக்கவும். பிரட் தூளை எடுத்துக் கொள்ளவும். 

பின்பு செய்து வைத்திருக்கும் கட்லெட்டை மைதா மாவில் முக்கி எடுக்கவும். பின்பு அதனை பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்.

சுவையான கோஸ் தொக்கு செய்வது எப்படி?

அனைத்து கட்லெட்டுகளையும் மாவில் முக்கி எடுத்து அவற்றை 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும். 

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கட்லெட்டை எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். அவ்வளவு தான் சூப்பரான சுவையில் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)