குடமிளகாய் உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தபடுகிறது. இது காய்கறிகளுக்கு சுவை மற்றும் மணம் தரும் வண்ணமயமான காயாகும். குடமிளகாய் சோலனேசியே குடும்பத்தைச் சேர்ந்தது.
உயிரியல் ரீதியாக கருப்பு மிளகும், குடமிளகாயும் ஒரே குடும்பத்தை சேர்ந்தது இல்லை. ஆனால் இரண்டிலும் ஒரே மாதிரியான சில சத்துகளும், குணங்களும் உள்ளன.
சுவையான மிளகு நண்டுக் குழம்பு செய்வது எப்படி?
இது ஆயிரம் வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவியுள்ளதாக சொல்லப்படுகிறது. குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகமுள்ளது.
மேலும் வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். இவற்றை சமைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது.
அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.
குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.
சுத்தமான ஈஸ்ட் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
மூட்டு வலிக்கு மருந்தாகிறது. பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது.
குடை மிளகாயை பயன்படுத்தி வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடமிளகாய் காக்கிறது. குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன.
சுவைக்கு உப்பு, மிளகு, எலுமிச்சை சாறு பிழிந்தால் அருமையான சாலட் தயார்.
நாம் சமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் !
குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி' சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.