சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப் செய்வது எப்படி?





சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப் செய்வது எப்படி?

0

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச் சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. 

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப் செய்வது எப்படி?

வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கி யுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. 

உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகள் நீங்கும். 

உயிர் வாழும் வரை ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை !

மேலும் பல் ஈறுகள் பலப்படும். இந்த கீரையை வைத்து குழந்தைகளுக்கு சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 

வல்லாரை கீரை - 1 கப்,

பாசிப்பருப்பு - 1 டீஸ்பூன்,

பூண்டு - 4,

சின்ன வெங்காயம் - 10,

மிளகு - சிறிது,

சீரகம் - சிறிது, 

வெண்ணெய் - 2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

பட்டை - 1,

லவங்கம் - 1. 

பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

செய்முறை :

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப் செய்வது எப்படி?

கீரை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

குக்கரில் 1 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்த பின் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் பருப்பு, கீரை சேர்த்து சிறிது வதக்கிய பின் 2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் போட்டு வேக வைக்கவும். 

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

குக்கர் விசில் ஆறியதும் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டி கொள்ளவும்.

வடிகட்டிய சூப்பை மீண்டும் அடுப்பில் வைத்து உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.சூப்பரான வல்லாரை கீரை சூப் ரெடி.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான இந்த வல்லாரை கீரை சூப் அருந்தலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)