மாட்டு இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?





மாட்டு இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?

0

இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதை பற்றி சொன்னாலே நம் உள்ளத்தில் உற்சாகம் ஊறும், நாவிலும் எச்சில் ஊறும். 

மாட்டு இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
அசைவ உணவுகளை அனைவரும் விரும்பிச் சாப்பிட்டாலும் கூட மாட்டுக் கறி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

மாட்டுக் கறியை சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர்.

மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதே சமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. 

அனைவரும் அறிய வேண்டிய மருத்துவக் குறிப்பு !

இந்த நிலையில், மாட்டுக்கறியை அதிகமாக உண்பதால் நமது வாழ்நாள் குறையும் என்றும், கோழிக் கறியை அதிகமாக உண்டால் வாழ்நாள் நீடிக்கும் என்றும் புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசைவ சாப்பாடுகளில் ஒன்றான மாட்டுக் இறைச்சிகளில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் செறிந்து உள்ளன. அதேசமயம், கொழுப்பும்  அதிகம் உள்ளது.

அதிக அளவு மாட்டு இறைச்சி சாப்பிடுவதால்  இருதய நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் . ஏனெனில் மாட்டு இறைச்சியில் அதிகமான அளவு கொழுப்புகள் Fats நிறைந்து காணப்படுகின்றது.

மாட்டு இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
இதனால் தமனிகளில் பாயும்  இரத்தத்தின் அளவு குறையும் மற்றும் உடலில்  வீரியம் குறைந்து நாள்பட்ட உபாதைகளை  ஏற்படுத்தும். 

அதே சமயம் மற்ற அசைவ உணவுகளைப் போல இதையும் அளவோடு சேர்த்து  கொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள் .

அரிசி - வெண்ணெய் -  சீஸ் - போன்றவற்றில் கூட கொழுப்புகள் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றை எவ்வாறு உண்கின்றோமோ அது போலவே அந்த மாட்டு இறைச்சியையும்  அளவோடு சாப்பிட வேண்டும்.

ஏனென்றால் மிருகத்தின் கொழுப்பானது உடல் தமனிகளில் உறைந்து தங்கி  ரத்த ஒட்டத்தை தடுக்கும். இதனால் மாரடைப்பு ஏற்படும்.

தினமும் ஒரு ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி !

மாட்டுக்கறியை அதிக அளவில் உண்போருக்கு குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாம். இருப்பினும் இதை நிரூபிக்க இதுவரை எந்த சான்றும் இல்லை. 

மாட்டு இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?

மாட்டுக்கறியில் உள்ள கார்சினோஜென் (Carcinogen), புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள். ஆகவே அளவுக்கு அதிகமாக மாட்டுக்கறியை உண்டால் உடலில் கார்சினோஜென்னின் அளவு அதிகரிக்கும். 

இதனால் புற்று நோய் வரலாம் என்று கணிக்கப்படுகிறது. மாட்டுக்கறியில் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை அதிகமாக உண்டால் உடலானது அதிக எடை அடையும் வாய்ப்பு உள்ளது. 

நாயை திருமணம் செய்யும் மாடல் - அதிர்ச்சித் தகவல் !

இருப்பினும் எந்த சாப்பாட்டைச் சாப்பிட்டாலும் போதிய உடல் இயக்கம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாதாரணச் சாப்பாடு சாப்பிட்டாலும் கூட எடை கூடத்தான் செய்யும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)