இது ஆரோக்கியமானது மட்டுமன்றி நீண்ட நேரம் பசியும் எடுக்காது. உடல் எடையை குறைக்க பல டயட் முறைகளை முயற்சி செய்வோருக்கு இந்த கஞ்சி உதவலாம்.
வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.
பிரியாணி இலையின் நன்மை தெரியுமா? உங்களுக்கு !
புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிகவும் நல்லது.
இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.
இந்த கீரையை கழுவி பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது. பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். நன்கு சுவையாக இருக்கும்.
இது ஆரோக்கியமானது மட்டுமன்றி நீண்ட நேரம் பசியும் எடுக்காது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வல்லாரை கீரை - 1 கொத்து
புழுங்கல் அரிசி - 1/4 கப்
திணை அரிசி - 1/2 கப்
குதிரை வாலி - 1/2 கப்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/4 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் - 1/4 கப்
எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 பல்
அருமையான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?
செய்முறை :
முதலில் மூன்று அரிசியையும் ஒன்றாக சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் அதை கழுவி குக்கரில் சேர்த்து சின்ன வெங்காயம் 6, பூண்டு பல், சீரகம், உப்பு மற்றும் தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து கொள்ளுங்கள்.
நம்மை வாழ வைக்கும் உணவு தத்துவம் தெரியுமா?
பின் 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
பின் வல்லாரை கீரையையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். நன்கு வதங்கியதும் கஞ்சியில் கொட்டி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் வல்லாரை கீரை கஞ்சி தயார்.