ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி கிராம்பு பசியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், செரிமானம், சிறுநீர் கழித்தல், சளி, பற்கள், ஈறுகள், ஆண்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
நோய்களைத் தடுக்கும் கிராம்பு
இது குறித்து, போபாலைச் சேர்ந்த ஆயுர்வேத வல்லுநர் மருத்துவர் ராஜேஷ் சர்மா கூறுகையில், கடும் வீரியம் கொண்ட கிராம்பை சரியான அளவில் உட்கொள்வதால் பல நோய்கள், தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.
இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இருப்பினும், அதிகமாக உட்கொண்டால், அது நம் ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த பானம் உடல் சூட்டை தடுக்கும் தெரியுமா?
கிராம்பில் காணப்படும் சத்துகள்
கிராம்பை உட்கொண்டால், வெள்ளை ரத்த அணுக்களை விருத்தியாக்க உதவுகின்றன எனவும், உடலில் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன என்றும் மருத்துவர்கள், வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது வலி நிவாரணம், பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
இது தவிர, கிராம்பில் வைட்டமின் பி1, பி2, பி4, பி6, பி9, வைட்டமின்-சி, பீட்டா கரோட்டின், வைட்டமின்-கே, புரதம், துத்தநாகம், செலினியம்,
ரிபோஃப்ளேவின், கோலின், தாமிரம், நியாசின், ஃபோலேட், தியாமின், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
உடலில் வலி இருக்கும் இடத்தில் ஐஸ் கட்டி ஜாலம் !
ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகம், சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ஆய்வில், ஈ கோலி, ஸ்டேஃபிலோகோகஸ் போன்ற
தொற்றுநோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்றுவதில் கிராம்பு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இதே போல மேற்கொள்ளப்பட்ட பலதரப்பட்ட ஆய்வுகளும் கிராம்பின் பல ஆரோக்கிய நன்மைகளை உறுதிப்படுத்தி உள்ளன. அவற்றில் சில...
உயர் ரத்த அழுத்தம்:
கிராம்பு பாலிபினால்களின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. பாலிபினால் என்பது, தாவரங்கள் மூலம் நாம் பெறும் நுண்ணூட்டச் சத்துகள்.
இந்த நுண்ணூட்டச் சத்துகள் நம் உடலில் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றன.
நாம் செய்யும் செயல்கள் நமக்கே திரும்பி வருகின்றன !
நீரிழிவு - சிறுநீரகம்:
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு, இதன் நுகர்வு நன்மை பயக்கும்.
சிறுநீரக ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், சிறுநீர் கோளாறுகளைப் போக்கவும் உதவுகிறது.
வாய்:
கிராம்புகளை உபயோகிப்பது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை 70 விழுக்காடு குறைக்கிறது.
அதே நேரத்தில், கிராம்பு எண்ணெய் பொதுவாக ஈறு தொற்றுக்கு காரணமான பீரியண்டால்ட் நோய்க்கிருமிகள் போன்ற பாக்டீரி யாக்களிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது.
கிராம்பு எண்ணெய்யில் யூஜெனால் என்ற உறுப்பு உள்ளது. இது பற்கள், ஈறுகளில் வலியைக் அதிகரிக்க உதவுகிறது. மேலும், கிராம்புப் பற்களை பிளேக், கேரிஸிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
புற்றுநோயினைத் தடுக்கும் கேரட் !
சுவாசம்:
சுவாசப் பாதையைச் சீராக்கும் கிராம்பு - சளி, இருமலைக் குறைக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தில், சளி, பிற நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளைப் போக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் கிராம்பு சைனசிடிஸ், ஆஸ்துமா போன்ற பல சுவாசப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
செரிமானம்:
கிராம்பு, செரிமான அமைப்புக்கு நல்லது என்று கருதப்படுகிறது. அடிப்படையில், கிராம்பு நொதிகளைத் தூண்டுகிறது. இது நமது செரிமானம், குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.
கிராம்பு சரியான அளவில் உட்கொள்வது வீக்கம், அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயு, பசியின்மை போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?
தோல் பிரச்சினைகள்:
கிராம்புகளில் உள்ள யூஜெனால் உடல், தோல் தொடர்பான பல பிரச்சினை களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. முகப்பருவுக்குக் கூட, கிராம்புகளின் வெளிப்புறப் பயன்பாடும் நன்மை பயக்கும்.
ஒற்றைத் தலைவலி:
தலைவலி, ஒற்றைத் தலைவலிக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். கிராம்பு எண்ணெய்யின் வாசனை தலை வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
ஆண்மையின் ஆரோக்கியம்:
ஆயுர்வேதத்தில், ஆண்களுக்குப் பாலியல் உடல்நலப் பிரச்சினைகளுக்கு உதவும் பல மருந்துகளில் கிராம்பு பயன்படுத்தப் படுகிறது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கிராம்புகளை அளவாகப் பயன்படுத்துவது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
இருப்பினும், மறுபுறம், அதிகப்படியான பயன்பாடு அதன் உற்பத்தியைக் குறைக்கும்.
சுவையான கிரீன் ரெட் சாண்ட்விச் செய்வது எப்படி?
கிராம்பு அளவில் சிறியதாக இருந்தாலும், அதனுடைய வீரியம் அதிகமாக உள்ளதால், மனித உடலுக்குப் பல்வேறு பயன்களை அளிக்கிறது.
இதை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல்வேறு உடல் உபாதைகளைத் தீர்க்கலாம்.