பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளில் சீஸ் மற்றும் பட்டர் இரண்டுமே முக்கியமானது. பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள் எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு முறையும் பார்க்கிறோம்.
குறிப்பாக பிரட் டோஸ்ட் செய்யும் போது பட்டர் அல்லது சீஸ் கொண்டு டோஸ்ட் செய்வது வழக்கம்.
இந்த இரண்டில் ஒன்றை காட்டிலும் மற்றொன்று நல்லதா, இதை எப்போதேனும் கவனித்திருந்தால் இந்த பக்கம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆண்மையை அதிகரிக்கும் பலாக்கொட்டை !
பட்டர் டோஸ்ட் அல்லது சீஸ் டோஸ்ட் இரண்டு பால் பொருட்களும் பொதுவாக மிகவும் விரும்பி உட்கொள்ளப் படுகின்றன.
ஆனால் இரண்டில் எது ஊட்ட சத்து நிறைந்தது ஆரோக்கியமானது என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்திருக்கும்.
இந்த கட்டுரையில் பட்டர் மற்றும் சீஸ் என்றால் என்ன மற்றும் இரண்டில் எது ஊட்ட சத்து மிகுந்தது என்பது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
சீஸ் என்றால் என்ன :
பாலாடைக் கட்டி என்பது பாலிலுள்ள புரதமான கேசீனை உறைய வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது கடைகளில் பல்வேறு வடிவங்களிலும் சுவைகளிலும் கிடைக்கிறது.
பொதுவாக பீட்சா, பாஸ்தா அல்லது டோஸ்ட் ஸ்ப்ரெட் போன்ற உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து இன் ஆடு மாடுகளின் பால் பாலாடைக்கட்டி உற்பத்திக்கு பயன்படுத்தப்படலாம்.
மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா !
பட்டர் என்றால் என்ன :
இந்த வெண்ணெய் சமையல் அல்லது பேக்கிங்கில் பயன்படுத்தப் படுகிறது. இதை பேக்கிங் செய்யும் தட்டிலும் பயன்படுத்தலாம்.
டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றிபயப்பட வேண்டாம் !
கலோரிகள் :
வயது, ஆண், பெண், குழந்தைகள், உயரம், எடை, வளர்சிதை மாற்றம் போன்ற காரணிகளை பொறுத்து தான் கலோரிகள் தினசரி அளவில் எவ்வளவு என்பது தீர்மானிக்கப்படுகிறது.
சீஸ் அதாவது பாலாடைக்கட்டியில் 100 கிராம் அளவுக்கு 349 கலோரிகள் உள்ளது. பட்டர் அதாவது வெண்ணெயில் 100 கிராமுக்கு 717 கலோரிகள் உள்ளது.
புரதம் :
நாம் எடுத்து கொள்ளும் உணவு முறையில் புரதம் முக்கிய பகுதி. புரதங்கள் அமினோ அமிலங்கள் எனப்படும் இராசயன கட்டுமான தொகுதிகளால் ஆனவை.
இது உடல் தசைகள் மற்றும் எலும்புகளை உருவாக்க மற்றும் சரிசெய்ய ஹார்மோன்கள் மற்றும் நொதிகளை உருவாக்க அமினோ அமிலங்களை பயன்படுத்துகிறது. இது ஆற்றல் மூலமாகவும் பயன்படுத்தலாம்.
சீஸ் என்னும் பாலாடைக்கட்டியில் 100 கிராம் அளவுக்கு 18 கிராம் புரதம் உள்ளது. பட்டர் என்னும் வெண்ணெயில் 100 கிராம் அளவுக்கு 0.8 கிராம் புரதம் உள்ளது.
கொழுப்பு :
புரதங்கள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உணவில் உள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துக்களில் மூன்று முக்கிய சத்து ஆகும். உடல் கொழுப்பை எரிபொருள் மூலமாக பயன்படுத்தப்படுகிறது.
கொழுப்பு உடலில் ஆற்றலின் முக்கிய சேமிப்பு வடிவம். இது பல முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது.
உணவில் மிதமான அளவு தேவைப்படுகிறது. அதிக கொழுப்பு அல்லது அதிக அளவு தவறான கொழுப்பு ஆரோக்கிய மற்றதாகவும் இருக்கலாம்.
சாலையில் உள்ள ரோடு ரிப்ளெக்டர் எப்படி செயல்படுகின்றன?
சீஸ் 100 கிராமில் 32 கிராம் கொழுப்பு, 18 கிராம் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் 1.1 கிராம் டிரான்ஸ் கொழுப்புகள்.
வெண்ணெய் 100 கிராமில் 81 கிராம் கொழுப்பு, 51 கிராம் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் 3.3 கிராம் டிரான்ஸ் கொழுப்புகள்.
வைட்டமின்கள் :
வெண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் கோலின் ஆகியவை நிறைந்துள்ளன. வெண்ணெய் 100 கிராமில் 2499 IU வைட்டமின் ஏ உள்ளது.
மேலும் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ, வைட்டமின் பி3 அல்லது நியாசின், வைட்டமின் பி2 அல்லது
ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி 5 அல்லது பாந்தோதெனிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 9 ஃபோலேட் ஆகியவை உள்ளன.
தாதுச் சத்துக்கள் :
100 கிராம் பாலாடைக்கட்டியில் 1045 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. மேலும் பாஸ்பரஸ், சோடியம், செலினியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் நிறைந்திருப்பதால், வெண்ணெய் தாதுச் சத்துக்களின் சிறந்த மூலமாகும்.
சுவையான வேர்க்கடலை கட்லெட் செய்வது எப்படி?
மேலும் சோடியம், செலினியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஃவுளூரைடு ஆகிய சத்துக்களும் சிறிய அளவில் உள்ளன.
சீஸ் பயன்கள் :
சீஸில் உள்ள வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் இதில் உள்ள துத்தநாகம் மற்றும் பயோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்பில் உதவுகிறது.
சீனித் துளசியை இனிப்பூட்டியாக பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் !
இது சருமத்தைப் பாதுகாப்பதோடு முடி மற்றும் நகங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் ஒப்பீட்டளவில் வெண்ணெயை விட குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருப்பதால், வெண்ணெயை விட சீஸ் மிகவும் ஆரோக்கிமான உணவாக உள்ளது.
பாலாடைக்கட்டி பயன்கள் :
ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்டிருப்பதால் வெண்ணெய் குடலில் உருவாகும் நோய்க்கிருமி நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.