நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினலா அல்லது போலியா என்று கண்டறிவது எப்படி?





நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினலா அல்லது போலியா என்று கண்டறிவது எப்படி?

0

கருப்பட்டியில் இருக்கும் மூலிகை நன்மைகளை தெரிந்தால் நிச்சயமாக இதனை சாப்பிடாமல் மிஸ் பண்ணவே மாட்டீர்கள். கருப்பட்டி என்பது இயற்கையாகவே கிடைக்கும் அற்புதமான மூலிகை மருந்தாகும். 

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினலா அல்லது போலியா என்று கண்டறிவது எப்படி?
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி வெல்லம். இதனை பனை வெல்லம் என்றும் அழைப்பர். 

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரினை காய்ச்சுவது மூலம் இந்த வெல்லம் கிடைக்கிறது. 

சுவையான இஞ்சி பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத் தன்மையுடன் கூடிய இனிப்புச் சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி.

போலி கருப்பட்டி எது என்பதை எளிதில் அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத் தன்மையுடன் கூடிய இனிப்புச் சுவையாக இருந்தால், அது தான் ஒரிஜினல் கருப்பட்டி.

முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.

கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித் தன்மையில் இருந்து இளக ஆரம்பிக்கும். 

அப்படி அது இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது ஒரிஜினல்.

நாள்பட்ட கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால் தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.

எந்த உணவுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது? 

ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டி துண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்து விடும்.

தேங்காயைத் தட்டிப் பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி.

கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப் பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலி.

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினலா அல்லது போலியா என்று கண்டறிவது எப்படி?

இன்றும் கிராமப்புறங்களில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். 

ஆனால், நகரத்தில் இருக்கும் பலருக்கும் கருப்பட்டியின் மகத்துவம் பற்றி தெரியாத ஒன்றாகவே உள்ளது. 

எல்லக்கட்டி கோழி பிரியாணி செய்வது எப்படி?

இதில் இருக்கும் மூலிகை நன்மைகளை தெரிந்தால் நிச்சயமாக இதனை சாப்பிடாமல் மிஸ் பண்ணவே மாட்டீர்கள்.

சமீப காலமாக பனை மரத்தின் அளவு தென் மாவட்டங்களில், குறைய துவங்கியுள்ளதால், கடந்த 10 வருசமா கருப்பட்டி தொழிலில் போலிகள் அதிகம் உருவாகி விட்டது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)