காலையில் அவசரம் அவசரமாகச் சமைப்பது, அதை விட அவசரமாகச் சாப்பிடுவது என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
அந்த அளவுக்கு வாழ்க்கை பரபரத்துக் கிடக்கிறது. அமர்ந்து சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எது கிடைக்கிறதோ அது தான் உணவு. அப்படிப் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவுப் பொருள், பிரெட்.
சமைக்க நேரமின்றி ஓடுபவர்கள், உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் பிரெட் மட்டுமே எளிதான உணவு.
வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கச் செய்யும் குறிப்பாக டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இன்னும் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தும்.
பிரட் அதிய கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு. அதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.பிரட்டில் உள்ள மிக எளிமையான கார்போஹைட்ரேட்டுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
இதனால் குடல் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே, காலையில் வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
முதலில் சிறிது சிறிதாக சாப்பிடுங்கள், பிறகு காலை உணவில் கோதுமை ரொட்டிகளை சேர்க்கலாம்.ஒயிட் பிரட்டில் மிக அதிக அளவில் சோடியம் நிறைந்திருக்கிறது.
இது உடலுக்கு குறிப்பாக சிறுநீரகத்துக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதனால் பிரெட் லைட்டான உணவு தானே என்று நினைத்து நிறைய சாப்பிட்டு விடுவோம். அதனால் நாம் சாப்பிடும் பிரட்டின் அளவை கவனிப்பது மிக முக்கியம்.
முடிந்தவரையில் காலையில் முழு கோதுமை பிரட் (whole wheat bread) ஆகியவற்றுடன் பழங்கள் போன்ற ஆரோக்கியமானவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளவாம்.
ஆனால் காலையில் பிரட் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக பால் அல்லது பழங்கள் என ஏதாவது எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கட்டாயமாக வெறும் வயிற்றில் பிரட் எடுத்துக் கொள்ளவே கூடாது.
மாட்டு இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
காலையில் சமைக்க நேரம் இல்லையே என கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் பிரெட் பாக்கெட் இருந்தால் உடனே இந்த அருமையான பிரெட் தோசை சுட்டுக் கொடுங்கள்.
இதன் சுவையால் வீட்டிலும் பாராட்டு மழை பொழியும். சரி இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
பிரெட் - 4 துண்டுகள்
கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
கேரட் - 1
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். மிகவும் பொடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அரைத்ததும் அதை ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளுங்கள்.
பின் அதில் கோதுமை மாவு, ரவை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் தயிர், தக்காளி, வெங்காயம், துருவிய கேரட், மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அக்வா ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம் !
இப்போது தோசை ஊற்றும் பதத்திற்கு தண்ணீர் ஊற்றி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் மாவு ரெடி. தோசைக் கல்லில் கெட்டியாக ஊற்றி தோசை போல் சுட்டு எடுங்கள். காலை உணவு தயார்.