சுவையான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி? #Poriyal





சுவையான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி? #Poriyal

0

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. 

சுவையான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி?
மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதை விட வேக வைத்து உண்பதே நல்லது.

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.

உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. 

பட்டரா அல்லது சீஸா எது நல்லது?

உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பை குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. 

சரி இனி உருளைக்கிழங்கு கொண்டு சுவையான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையான பொருட்கள் :.

உருளைக்கிழங்கு - 3 

பெரிய வெங்காயம் - 1 

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - 1

பூண்டு - 3 பல் 

கடுகு - ½ மேஜைக்கரண்டி

கடலை பருப்பு - ½ மேஜைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - ½ மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள் - ¼ மேஜைக்கரண்டி

துருவிய தேங்காய் - 2 மேஜைக்கரண்டி 

மல்லி தூள் - ½ மேஜைக்கரண்டி

கரம் மசாலா - ½ மேஜைக்கரண்டி

மிளகு தூள் - ¼ மேஜைக்கரண்டி

சாம்பார் தூள் - ¼ மேஜைக்கரண்டி

மிளகாய் தூள் - தேவையான அளவு 

கொத்தமல்லி - தேவையான அளவு 

கருவேப்பிலை - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

ஒரு சிறிய கிராம்பில் இவ்வளவு நன்மைகளா?

செய்முறை :.

சுவையான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி?

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, இஞ்சி பூண்டை தட்டி, மற்றும் தேங்காயை துருவி வைத்து கொள்ளவும்.

உணவு மூலம் ஏற்படும் அலர்ஜியை எப்படி சமாளிப்பது?

அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை போட்டு சுமார் 20 நிமிடம் வரை வேக விடவும்.

25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகு, கடலை பருப்பு, மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு அதை கடுகு வெடிக்கும் வரை வறுக்கவும்.

கடுகு வெடித்தவுடன் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், சாம்பார் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை அதை வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் நாம் வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

குழந்தையை எளிதாக தூங்க வைப்பது எப்படி? தெரியுமா?

2 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி 

அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விட்டு பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான உருளைக்கிழங்கு பொரியல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உண்டு மகிழுங்கள்.

Post a Comment

0Comments

Post a Comment (0)