சூப்பரான மொறு மொறு ஜவ்வரிசி தோசை செய்வது எப்படி?





சூப்பரான மொறு மொறு ஜவ்வரிசி தோசை செய்வது எப்படி?

0

பொதுவாக விரதம் இருக்கும் போது எடுத்து கொள்ளும் உணவு வகைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பல வகை உணவு தயாரிப்பின் போது பயன்படுத்தப் படுகிறது. 

சூப்பரான மொறு மொறு ஜவ்வரிசி தோசை செய்வது எப்படி?
இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகையான பலகாரங்களிலும் இது சேர்க்கப்படுகிறது. மேலும் அனைவராலும் ரசித்து ருசித்து உண்ணப்படும் பொருளாகவும் இது விளங்குகிறது. 

ஜவ்வரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அளவில் கொழுப்பு உள்ளது. ஆகவே எடை மீது அதிக அக்கறை உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம். 

பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை !

ஸ்டார்ச்சால் நிறைந்துள்ள ஜவ்வரிசியில் செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் என எதுவும் இல்லாததால், இதனை பரவலாக அனைவரும் விரும்புகின்றனர். 

உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்றவும், இதனை உணவாக அளிக்கலாம். சரி இனி ஜவ்வரிசி கொண்டு சூப்பரான மொறு மொறு ஜவ்வரிசி தோசை செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையான பொருட்கள் : 

புழுங்கலரிசி - ஒன்றரை கப், 

ஜவ்வரிசி (மாவு அரிசி) - 1 கப், 

சின்ன வெங்காயம் - 10, 

பச்சை மிளகாய் - 4, 

கடுகு - அரை டீஸ்பூன், 

சீரகம் - அரை டீஸ்பூன், 

உப்பு - தேவைக்கேற்ப, 

எண்ணெய் - தேவையான அளவு. 

உரிமையாளர் உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய் !

செய்முறை: 

சூப்பரான மொறு மொறு ஜவ்வரிசி தோசை செய்வது எப்படி?

ஜவ்வரிசியைக் கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி தயிர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். அவ்வப்போது இதனைக் கிளறினால் தான் முழுமையாக ஊறும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். முதலில் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும்.

அரிசி நன்கு அரைபட்டவுடன்… ஜவ்வரிசி, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். பின் மாவை இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். 

மாணவிகளுக்கு சாபம் விட்ட நிர்மலா தேவி?

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு வந்ததும் கடுகு தாளித்து பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு உப்பு சேர்த்து வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும். 

தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி, 

வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து வெந்தவுடன் எடுத்து பரிமாறவும். இப்போது சூப்பரான ஜவ்வரிசி தோசை ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)