இட்லி, தோசைகளின் இடத்தை பாஸ்தா, பீட்சா பிடித்து விடுமோ என அச்சமாக இருக்கிறது. இவை நூடுல்ஸ் வகையைச் சார்ந்தவை தான்.
பாஸ்தா உணவு முறைப் பற்றி டயட்டீஷியன் ஹேமமாலினியிடம் கேட்டோம். பெரும்பாலும் மைதா மாவைப் பயன்படுத்தித் தான் பாஸ்தாவும் தயாரிக்கப் படுகிறது.
தூக்கம் வராமல் துரத்தும் இன்சோம்னியா பிரச்னை... தவிர்க்க வேண்டிய உணவுகள் !
மைதா என்பது நன்கு சுத்திகரிக்கப்பட்டு, சத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்ட உணவுப் பொருள். இதில் நார்ச் சத்து உள்பட எந்தச் சத்துமே இல்லை என்பதால், உடலுக்கு எந்த நன்மையும் கிடையாது.
பாஸ்தாவில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும் தன்மை கொண்டது.
இது, பெரும் பாலானவர்களுக்கு செரிமானத்தில் பிரச்னை ஏற்படுத்தும். பாஸ்தா ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால், ஆரோக்கியமானது அல்ல.
நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவைத் தவிர்த்து, கோதுமை, மக்காச்சோளம், சிவப்பு அரிசி போன்ற முழுதானிய மாவில் இருந்தும் பாஸ்தா தயாரிக்கப் படுகிறது.
எந்த மாவில் இருந்து பாஸ்தா தயாரிக்கப் படுகிறதோ, அதைப் பொறுத்து சத்துக்கள் மாறுபடும்.
கோதுமையில் செய்யப்பட்ட பாஸ்தாவில் அதிக அளவில் நியாசின், தயாமினும், நார்ச்சத்தும், புரதச் சத்தும் அடங்கி உள்ளது.
இதைச் சாப்பிடும் போது பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். இந்த வகை பாஸ்தாக்கள், பி காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்டது.
இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு என்பது மிகவும் மெதுவாக இருக்கும். பாஸ்தாவுடன் அதிக அளவில் காய்கறிகள் சேர்க்கப்பட்டு சமைக்கப்படும் போது, அதன் பலன்களும் கூடும்.
புருவ முடிகளைத் திருத்தும் பெண்களுக்கு அதிர்ச்சித் தகவல் !
எனவே, கடைசியில் பாஸ்தா வாங்கும் போது அது முழு தானியங்களால் தயாரிக்கப்பட்டதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும்.
இரண்டு வயது முதல் 70 வயதினர் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகிவிடும்.
செரிமானம் குறைபாடு உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்த்து, பாஸ்தாவுக்குப் பதில் சப்பாத்தி சாப்பிடுவது நல்லது என்கிறார்.
பாஸ்தாவை சமைக்கும் முறை எப்படியாம்?
காலையில் பழத்துண்டுகள், தேன் சேர்த்து சாப்பிடலாம். இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
PF என்றால் என்ன? தொிந்து கொள்ள வேண்டுமா?
சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அவ்வப்போது சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்பது தான் உண்மை.