அருமையான இறால் டிக்கா மசாலா செய்வது எப்படி?





அருமையான இறால் டிக்கா மசாலா செய்வது எப்படி?

0

இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம். 

அருமையான இறால் டிக்கா மசாலா செய்வது எப்படி?

இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும். 

இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கி யுள்ளதால், கணினி திரை முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும். 

காது குத்துவது கண்களுக்குப் பாதுகாப்பா? 

தலை முடி மற்றும் சரும அணுக்களில் உருவாகும் புதிய அணுக்களை பாதுகாப்பதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் முடி கொட்டுதல் ஏற்பட்டாலோ அல்லது முடி வளர்ச்சி நின்று போனாலோ இறால்கள் உங்களுக்கு கை கொடுக்கும். 

சரி இத்தனை கத்துவம் வாய்ந்த இறால் கொண்டு அருமையான இறால் டிக்கா மசாலா செய்வது எப்படி? என்று இங்கே பார்ப்போம்.

தேவையானவை : .

இறால்  - 1/2 கிலோ, 

வெங்காயம் - 3, 

எலுமிச்சை சாறு - தேவைக்கேற்ப, 

உப்பு - தேவைக்கேற்ப, 

மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,  

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன், 

க்ரீம் தயிர் - தேவைக்கேற்ப, 

கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன், 

இஞ்சி பூண்டு - தேவைக்கேற்ப, 

சாக்கடல் ஏன் அதிசயங்கள் நிறைந்துள்ளது?

செய்முறை : .

அருமையான இறால் டிக்கா மசாலா செய்வது எப்படி?
ஒரு பவுலில் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். இறாலை அதில் சேர்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். 

ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றவும். அது உருகியதும். ஊற வைத்த இறாலை அதில் கொட்டி 4 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக சமைக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும். 

பொலிவான சருமம் பெற ஊட்டச்சத்து மிக்க மைசூர் பருப்பு !

அது நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். அதன் பின்னர் வெங்காயத்தின் மீது இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியனவற்றை சேர்க்கவும். 

எல்லாவற்றையும் ஒரு நிமிடம் வரை வதக்கவும். நன்றாக மனம் வரும் வரை வதக்கவும். பின்னர் மிதமான சூட்டில் 4 நிமிடங்கள் வரை வேக விடவும். 

அடுத்ததாக க்ரீம் தயிர், கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்கவும். இதோடு வேக வைத்த இறால்களை சேர்க்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)