உடலின் அன்றாட இயக்கத்துக்கு, தசைகளின் பராமரிப்பு, வளர்ச்சி, உருவாக்கத்துக்கு புரதச்சத்து மிக மிக அவசியம்.
உடலுக்குத் தேவையான 22 அமினோ அமிலங்கள் சேர்ந்த கலவையைத் தான் புரதச்சத்து என்கிறோம். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.
சைவம் மற்றும் அசைவ உணவுகளில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. அசைவம் மூலமாகக் கிடைக்கும் புரதத்துக்கு இணையாக, புரதம் நிறைந்த சைவ உணவுகளும் உள்ளன.
ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை?
ஒருவர் 70 கிலோ எடை இருந்தால், அவருக்கு ஒரு நாளைக்கு 67 முதல் 70 கிராம் புரதம் தேவைப் படலாம். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர் புரதத்தை எடுத்துக் கொண்டாலே போதுமானது.
ஆண்கள், பெண்கள் அழகாகத் தெரியும் வயது எது?
சைவம் சாப்பிடும், 70 கிலோ எடையுள்ள நபர் தினமும், பயறு வகைகள், சோயா, பால், பருப்பு வகைகள் எடுத்துக் கொள்வதன் மூலம், 70 கிராம் அளவுக்குப் புரதச் சத்தைப் பெறலாம்.
புரோட்டின் அதிகம் உள்ள உணவுகள் எது?
உங்கள் புரத உட்கொள்ளலை சமநிலைப்படுத்த, உங்கள் தினசரி உணவு மற்றும் தின்பண்டங்களில் முட்டை, ஒல்லியான இறைச்சிகள், கொட்டைகள் மற்றும் கொண்டைக்கடலை போன்ற அதிக புரத உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
கொட்டைகள் மற்றும் விதைகள் சமீபகாலமாக பலரும் தினசரி வழக்கில் சேர்த்து வருகின்றனர். கொட்டைகள் மற்றும் தாவரங்களின் விதைகள் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள், சியா விதைகள், பூசணி விதைகள், சணல் விதைகள் போன்றவை.
பால் கால்சியம் மட்டும் அல்லாமல் புரதமும் நிறைந்தது. பாலில் இரண்டு வகையான புரதங்கள் உள்ளன. 20% whey 80% கேசீன் ஆகும்.
உடல் வே புரதத்தை விரைவாகவும், அடுத்து உள்ள கேசின் புரதத்தை மெதுவாகவும் செரிக்கிறது. பால் பொருள்கள் புரதத்தின் நல்ல ஆதாரங்கள் இது உடலுக்கு தேவையான ஒன்பது அமினோ அமிலங்களை கொண்டுள்ளன.
அதனால் ஆரோக்கியமானவற்றை தேர்ந்தெடுப்பதன் மூலம் பாலில் இருந்தும் புரதத்தை பெறலாம்.