சுவையான கலர்ஃபுல் காராபூந்தி செய்வது எப்படி?





சுவையான கலர்ஃபுல் காராபூந்தி செய்வது எப்படி?

0

வேர்க்கடலையைப் பல்வேறு ஊட்டச்சத்துக்களின் தொகுப்பு என்றே சொல்லலாம். வெறும் வயிற்றில் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால் அன்றைய நாளுக்கான ஒட்டுமொத்த எனர்ஜியையும் அதிலிருந்து பெற முடியும். 

சுவையான கலர்ஃபுல் காராபூந்தி செய்வது எப்படி?

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உணவுப்பொருள்.இதய நோய் உள்ளவர்கள், கொலஸ்டிரால் உள்ளவர்கள் கூட முழுமையாக வேர்க்கடலையை தவிர்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. 

மிதமான அளவில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். வேர்க்கடலையை, வெல்லத்துடனும், ஆட்டுப் பாலுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். 

இது வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்து. 

ஆட்டுப் பாலில் எலுமிச்சைச் சாறு பிழிந்து, அதனுடன் ஒரு பிடி வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும். வயிற்றில் நிகோடினிக் அமிலம் குறையும் போது தான் இந்த பிரச்னை ஏற்படும். 

வெள்ளை சோள மாவு ரொட்டி செய்வது எப்படி?

வேர்க்கடலையில் உள்ள நையாசின் இந்நிலையைச் சீர் செய்கிறது. புதிதாகப் பறித்த வேர்க்கடலையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் வாயில் உள்ள ஈறுகள் உறுதியடையும். 

சரி, இப்போது வேர்க்கடலை கொண்டு சுவையான கலர்ஃபுல் காராபூந்தி செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.

தேவையானவை: 

கடலை மாவு – 2 கப், 

அரிசி மாவு – ஒரு கப், 

முந்திரி – ஒரு டீஸ்பூன், 

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், 

ஃபுட் கலர் (சிவப்பு, பச்சை) – தேவையான அளவு, 

வேர்க்கடலை – அரை கப், 

கறிவேப்பிலை – ஒரு கொத்து, 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

சுவையான சிக்கன் 65 செய்வது எப்படி?

செய்முறை : 

சுவையான கலர்ஃபுல் காராபூந்தி செய்வது எப்படி?

கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து, மூன்று கிண்ணங்களில் பிரித்து வைக்கவும். ஒன்றில் ஆரஞ்சு, இன்னொன்றில் பச்சை என ஃபுட் கலரை சேர்த்துக் கலக்கவும். 

மூன்றாவது கிண்ணத்தில் கலர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை. பிறகு, ஒவ்வொரு கிண்ணத்தில் இருக்கும் மாவையும் பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். 

உருளைக்கிழங்கு பனீர் பரோட்டா செய்வது எப்படி?

பின்பு எண்ணெயை காய வைத்து, ஒவ்வொரு கலர் மாவையும் பூந்திக் கரண்டியில் பூந்திகளாக தேய்த்து பொரித்து எடுக்கவும். 

பூந்திகளை அகலமான தட்டில் கொட்டி, வறுத்த வேர்க்கடலை, முந்திரியை சேர்த்து, பொரித்த கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)