பரபரப்புக்குப் பஞ்சமில்லாதது காலை வேளை. பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதே பெரும்பாடு.
அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்க வேண்டியது அவசியம்.
தூக்கத்தின் பலன் பற்றி தெரிந்து கொள்ள !
அதற்கு முட்டையைச் சேர்த்துக் கொண்டால் போதும்... நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம். முட்டை உணவுகள் எளிதில் செய்து விடக் கூடியவை.
அதிலும் அவித்த முட்டை சாப்பிடுவது நல்லது. இது உடலுக்கு நல்ல ஆரோக்கிய பலன்களை வழங்குகின்றது. அந்த வகையில் அவித்த முட்டை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
முட்டை சாப்பிட்டு வருவதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது. முட்டையில் கொலஸ்ட்ரால் இருந்தாலும் இது உடல் எடையை அதிகரிக்க வைக்காது.
தினமும் சுடுநீர் குடிப்பது கிடைக்கும் நன்மைகள் !
முட்டையில் உள்ள கோலைன் உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்சிக்கும் உதவி புரியும். பாலுணர்ச்சி அதிகரிக்கும். நோய்வாய்ப்பட்ட வைத்திய சாலையில் இருப்பவர்களின் உடல் பலம் பெற முட்டை சாப்பிட்டு வரலாம்.
முட்டையில் கால்சியம் இருப்பதனால் எலும்புகள் வலு பெறும். வளரும் குழந்தைக்கு முட்டை கொடுப்பதனால் வளர்ச்சி துரிதமாகும்.
புரதசத்து குறைப்பாடு இருப்பவர்கள் அவசியம் 2 முட்டைகள் சாப்பிட்டு வருவது நல்லது. கர்ப்பிணிகள் பெண்கள் தினமும் முட்டை சாப்பிடுவதனால் கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துயும் தரும்.
புரதச்சத்து:
ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.
வைட்டமின் டி:
வெற்றி பெறுபவர்கள் செய்யும் செயல்கள் !
ஆன்டி ஆக்ஸிடன்ட்:
இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
எச்சரிக்கை!
சர்க்கரை நோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.