கொசுக்களை விரட்டி அடிக்கவும் கட்டுக்குள் வைக்கவும் தான் எத்தனை எத்தனை பொருள்கள் சந்தையில் குவிந்து கிடக்கின்றன.
கொசுவர்த்தி, நொடியில் விரட்டு கொசு காகிதம், கொசு திரவம், கொசுவை பிடிக்கும் மிஷின், கொசுவை அழிக்கும் மின்சார பேட்,கொசு கடிக்காமல் இருக்க உடலில் தடவ களிம்பு, இத்தனை சாதனங்கள் இருந்தும் டிமிக்கி கொடுத்து விடுகிறது கொசு.
ஆனால் அதை காட்டிலும் இப்படி பயன்படுத்தும் சாதனங்களால் அதை சுவாசிக்கும் அதன் அருகில் இருக்கும் நமக்குதான் ஆரோக்கிய கேடு உண்டாகிறது.
நாம் சமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் !
நமக்கும் பாதிப்பில்லாமல் கொசுவையும் விரட்டி அடிக்க இயற்கை முறையை கடைபிடிக்கலாம். அப்படி என்ன செய்தால் கொசுக்கள் ஓட்டம் பிடிக்கும் பார்க்கலாம்.
இந்த கொசுக்களை அழிப்பதென்பது சற்று கடினமான காரியம் தான். முடிந்த அளவிற்கு நம்மையும் நம்மைச் சுற்றியும் சுத்தமாக வைத்திருந்து,
ஆங்காங்கே நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதும் தான் நமக்கு பாதுகாப்பு ஆகும். ஆனால், இதனை பயன்படுத்தும் போது நமக்கும் ஆரோக்கிய கேடு உண்டாகிறது.
எனவே, நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பில்லாமல் கொசுவை விரட்டி அடிக்க நம் வீட்டில் உபயோகப்படுத்தும் சில பொருட்களை வைத்து லிக்விட் தயார் செய்து பயன்படுத்தலாம். அது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கற்பூரம் - 1 டீஸ்புன்
லவங்கம்- 1 டீஸ்புன்
பூண்டு நறுக்கியது -1 டீஸ்புன்
வெங்காயம் நறுக்கியது - 1 டீஸ்புன்
ஷாம்பு -1 டீஸ்புன்
தேங்காய் எண்ணெய் -1 டீஸ்புன்
செய்முறை :
முதலில் வெங்காயத்தையும், பூண்டையும் தோலுரிச்சி நல்லா பொடியா நறுக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
அதில், பொடி கற்பூரம் ஒரு பத்து போட்டு, அது கூடவே லவங்கம் ஒரு ஐந்து சேர்த்துகோங்க.
இதோட ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் கட் பண்ணி அதுல ஊத்தி விடுங்கள்.
இதை எல்லாம் சேர்த்த பிறகு நல்ல நுரை வரும் அளவுக்கு மிக்ஸ் பண்ணி விட்டுடுங்க.
மிக்ஸ் பண்ண பிறகு அதில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து எல்லாவற்றையும் முதலில் பேஸ்ட் போல செய்து வைச்சிடுங்க.
சுவையான ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி?
பிறகு கடைசியா கொஞ்சமா ஏதேனும் ஒரு டூத் பேஸ்ட் சேர்த்து கூடவே கொஞ்சமா தண்ணி ஊற்றி நல்லா மிக்ஸ் பண்ணி வெச்சிடுங்க.
இது குறைஞ்சது எட்டு மணி நேரம் கழித்து, ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைத்து விட்டு சாயங்கால நேரம் உங்கள் வீட்டின் அனைத்து மூலையிலும் அடிச்சி விட்டுடுங்க.
இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க. அப்புறம் கொசு உங்க வீட்டு பக்கம் வரவே வராது.