சமையலறை பாண்டங்கள் கழுவும் நீரையம் குளியலறை நீரையும் தோட்டத்திற்குப் பாய்ச்சலாம். ஆனால் கலங்கள் கழுவுவதற்கு சாம்பல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குளிப்பதற்கு, கிளிசரின் சோப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். (நாங்கள் இவ்வாறுதான் செய்கிறோம்). இல்லையெனில் பாய்ச்ச இயலாது.
தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை உருவான கதை !
இரசாயனம் தவிர்க்க இயலாது எனில், ஒன்று செய்யலாம். செடிகளின் தண்டு வரை நீரைச் செலுத்தாமல், ஒரு ஒன்றரை அடி தள்ளி நீர் நின்று விடுமாறு செய்தால், இரசாயனம் நிலத்தின் மேற்பரப்பில் தங்கி விடும்.
நல்ல நீர் மட்டுமே நிலத்தில் இறங்கி, அதனை வேர்கள் இழுத்துக் கொள்ளும். ஆனால் இது பெரிய செடிகள், மரங்களுக்கு மட்டுமே பயன்தரும் முறையாகும்.
செலவில்லாமல் எளிய முறையில் கழிவு நீரை பூமிக்கு அனுப்பிட்டு, நிலத்தடி நீரை தோட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார்கள்.
அதற்கு இரண்டடிக்கு, இரண்டடி என்று குழி வெட்டி அதில் கற்களை நிரப்ப வேண்டும். கழிவு நீர் அதில் விழும்படியாக அமைக்க வேண்டும்.
அடுத்து கழிவு நீர் வரும் பாதையில் சேப்பங்கிழங்கு, கல் வாழைத் தாவரங்களை நட்டு வளர்க்க வேண்டும். இந்த தாவரங்களுக்கு நீரை சுத்திகரிக்கும் தன்மை உண்டு என்று கூறப்படுகிறது.
உப்பைக் கொண்டு தூளான டிப்ஸ்கள் !
இந்த முறையில் நிலத்தடி நீரும் உயர்ந்து, இயற்கையான முறையில் சுத்தமான நீரும் கிடைக்கிறது.