மயோனைஸ் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தருமா?





மயோனைஸ் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தருமா?

0

சாட் கடைகள், சாண்ட்விட்ச், பர்கர், சிக்கன் பார்பிக்யூ, க்ரில் என மயோனைஸ் இல்லை என்றால் அது உப்பில்லா உணவு போன்றது. அதன் தனி சுவைக்காகவே பலரும் மயோனைஸை நாடுவார்கள். 

மயோனைஸ் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தருமா?
அதை தயாரிப்பதும் எளிது என்பதால் வீட்டிலேயேவும் பலர் மயோனைஸை செய்து வைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது உடலுக்கு ஆரோக்கியமான விஷயமா?

மயோனைஸ் முழுக்க முழுக்க முட்டை வெள்ளைக்கரு, எண்ணெய், சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி மிக்ஸியில் அரைத்து தயாரிக்கப் படுவதாகும். 

அப்படி தயாரிக்கப்படும் மயோனைஸ் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான உணவுப் பொருள் என்கின்றனர்.

ஆய்வுகள் மூலம் அறியப்பட்டதில் இதை சரியாக சேமித்து ஃபிரிட்ஜில் பராமரிக்கப்பட வில்லை எனில் ஒரே நாளில் கெட்ட கிருமிகள் இனப்பெருக்கம் செய்து விடுமாம். 

கடைகளில் விற்கப்படுவதில் பதப்படுத்த தேவையான மூலக்கூறுகள் சேர்க்கப் படுகின்றன. அவ்வாறு சேர்க்கப்படுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

அதே போல் எண்ணெய் பயன்படுத்தப் படுவது அதிக கொழுப்பு நிறைந்தது. அதாவது ஒரு ஸ்பூன் மயோனைஸ்  94 கலோரிகளைக் கொண்டதாம். 

எனவே இது உடலில் கலோரி அளவை கண்ணுக்கே தெரியாமல் அதிகரித்து விடும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு மயோனைஸ் எதிரி எனலாம்.

இதற்கு மாற்று வழி என்றால் குறைந்த கொழுப்பு கொண்ட மயோனைஸும் கிடைக்கின்றன. ஆனால் அது சுவை சற்று குறைவாக இருக்கும். 

இருந்தாலும் உடல் எடைக் குறைக்க நினைப்போருக்கு இது ஏற்றது. இருப்பினும் இதுவும் ஆபத்துதான் என்றே எச்சரிக்கின்றனர். 

எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைப்போர் இதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர்.

Preservative சேர்க்காமல் வீட்டில் தயாரிக்கும் மயோனைஸை நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் சாதாரணமாக வைத்து பாதுகாக்கலாம். 

உடல் பருமன் மற்றும் இதய நோயாளிகள் கவனத்திற்கு மயோனைஸில் கொழுப்புச்சத்து அதிகமுள்ளதால் உணவின் கலோரி எண்ணிக்கையை அதிகரித்து விடும். 

எனவே, Low Calorie - Balanced Diet கடைபிடிப்பவர்கள் இதை தவிர்க்கலாம். மேலும் அதிக அளவில் கொழுப்பு உள்ள உணவுகளை எடுப்பதன் மூலம் இதய நோய், Metabolic Syndrome போன்ற நோய்களுக்கு இது வழிவகுக்கும். 

ஆதலால் தமது உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றாற் போல உணவு பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.

வீகன் (Vegan) மயோனைஸ்

மயோனைஸ் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தருமா?

Vegan மற்றும் சைவ உணவு முறைகளைப் பின்பற்றுபவர்கள் கவலைப்பட வேண்டாம். 

அவர்கள் முட்டை கருவிற்கு பதில் சோயாபால் அல்லது முந்திரி விழுது உபயோகித்து சுவையான மற்றும் Cholesterol Free மயோனைஸை உண்டு மகிழலாம்.

மயோனைஸை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள் வெள்ளை கொண்டைக் கடலை உபயோகித்து தயார் செய்யும் 

இரவில் வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்வது ஏன்?

புரதச்சத்து நிறைந்த Hummus, Avocado Pesto அல்லது எலுமிச்சைச் சாறு - ஆலிவ் எண்ணெய் டிரெஸ்ஸிங் போன்றவை சேலட்களில் பயன்படுத்தலாம். 

இவை குறைந்த அளவு கலோரிகளையே கொடுக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)