நமது முன்னோர்கள் மிளகாய் என்பது யாதென அறியாதவர்கள். ஏனெனில், அவர்கள் சமையல், மருத்துவம் என அனைத்திலும் மிளகை சேர்த்து நன்மை அடைந்து வந்தார்கள்.
மிளகு ஓர் சிறந்த மூலிகை மருந்து என இப்போது தான் மேல்நாட்டு ஆய்வாளர்களும், மருத்துவர்களும் ஆராய்ந்து வருகிறார்கள்.
வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும்.
இதுக்கு போயா ஹெலிகாப்டரை ஊருக்குள் தரையிறக்கினாய்ங்க... இத கேட்டா சிரிப்பு தான் வரும் !
மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள் தூளுடன் மிளகுத் தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சனை சரியாகும்.
மிளகை பொடி செய்து நீரில் இட்டு காய்ச்சி வடிக்கடி, அந்த நீரைக் குடித்து வந்தால் கபம் சரி ஆகும்.
ஈரல் நோய் எனப்படும் வைரல் ஹெப்பாடிடிஸ் பிரச்சனை இருப்பவர்கள் மிளகு, சுக்கு, திப்பிலி மூன்றையும் சம அளவு வறுத்துப் பொடி செய்து, காலை, மாலை என இரு வேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.
தேவையானவை : .
கோதுமை மாவு – ஒரு கப்,
மைதா மாவு – ஒரு கப்,
மிளகுத்தூள் – 3 டீஸ்பூன்,
நெய் (அ) வனஸ்பதி – கால் கப்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
செய்முறை : .
நெய் (அ) வனஸ்பதியுடன் உப்பு சேர்த்து நன்றாகக் குழைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசையவும்.
உலகின் நம்பர் உணவுச் சங்கிலி மெக்டொனால்ட்ஸ் உருவானது எப்படி?
மாவை மெல்லிய சப்பாத்தி போல் தேய்த்து, கத்தியினால் குறுக்கு நெடுக்காக டைமண்ட் வடிவ துண்டுகளாக வெட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மிளகு துக்கடா பறிமாற ரெடி.
குறிப்பு :
வனஸ்பதியில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. ஏனெனில் அவை மொத்த மற்றும் எல்.டி.எல் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன.
இருப்பினும், தேங்காய் எண்ணெயில் காணப்படும் குறுகிய மற்றும் நடுத்தர சங்கிலி சேச்சுரேட்டேடு கொழுப்பு அமிலங்கள் போன்றவை சீரம் லிப்பிட்களை பாதிக்காததால் அவை தீங்கு விளைவிப்பதாக கருதப் படுவதில்லை.
வனஸ்பதியில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் சீரம் லிப்பிட்களில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
அதனால் தான் இதய நோய்களின் ஆபத்துக்கான உடனடி இணைப்பு காரணமாக இது நிறைவுற்ற கொழுப்புகளை விட மோசமாக கருதப்படுகிறது. மேலும் இது மார்பக புற்று நோய் அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இதை தவிர்ப்பது நல்லது.