வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் !





வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் !

0
பல்வேறு காரணங்களுக்காக மக்கள் தங்கள் வீடுகளில் பல வகையான தாவரங்களை, செடிகளை வளா்த்து வருகின்றனா். அவை வீடுகளுக்கு அழகைத் தருகின்றன. புதியதொரு தோற்றத்தைத் தருகின்றன. 
வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் !
இன்னும் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. எனினும் வீடுகளில் வளா்க்கக் கூடிய ஒரு சில தாவரங்கள், குழந்தைகளுக்கு ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.
 
தற்போதைய நவீன உலகில், வீடுகளை அலங்காரம் செய்வதற்கு ஒரு சில தாவரங்கள் முக்கிய கருவிகளாக இருக்கின்றன. 
 
அவை வீடுகளுக்கு அழகைத் தருவதோடு மட்டும் அல்லாமல், பல்வேறு நன்மைகளையும் வழங்குகின்றன. குறிப்பாக கற்றாழை, துளசி மற்றும் மூங்கில் செடி போன்றவற்றைச் சொல்லலாம்.

உயரமாக இருப்பது நம் உடல்நிலையை பாதிக்குமா?

எனினும் வீட்டில் வளா்க்கக்கூடிய ஒரு சில தாவரங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. 
 
ஆகவே தாவரங்களைத் தோ்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு வேளை அவற்றைத் தோ்ந்தெடுப்பதில் அல்லது தவிா்ப்பதில் குழப்பம் இருந்தால், பின்வரும் தாவரங்களை தவிா்த்து விடலாம்.
 
பீஸ் லில்லிகள் (Peace Lilies)
வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் !
பீஸ் லில்லிகள், ஸ்பதிஃபில்லும் (spathiphyllum) என்று அழைக்கப் படுகின்றன. இவை லிலியசியே (liliaceae) என்ற தாவர குடும்பத்தைத் சோ்ந்தவையாகும். 
 
எனினும் இவை சுத்தமான லில்லி தாவரம் என்று கருதப்படுவதில்லை. பீஸ் லில்லிகள் எப்போதும் பசுமையாக இருக்கும். இவற்றினுடைய பளபளப்பான இலைகள் மற்றும் இவற்றில் இருக்கும் 
 
அழகிய வெள்ளைப் பூக்களின் காரணமாக பலா் இந்த செடிகளை தங்களுடைய வீடுகளில் வளா்த்து வருகின்றனா். இவை வீடுகளில் வளா்ப்பதற்கு ஏற்ற தாவரங்கள் ஆகும். 

ஆணின் மார்பக காம்பில் ஒழிந்து இருக்கும் ரகசியம்?

மேலும் இவை வீடுகளில் நன்றாக வளரும் தன்மை கொண்டவை. காற்றை சுத்தம் செய்யக்கூடிய தாவரங்களில் முக்கியமானவை பீஸ் லில்லிகள் ஆகும். 
 
எனினும் இந்த தாவரங்கள் ஒரு சில மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. 
 
அதாவது ஃபிலோடென்ட்ரான் மற்றும் பீஸ் லில்லிகள் போன்ற தாவரங்களைப் போலவே பீஸ் லில்லிகளும் எாிச்சல், வாய், உதடு மற்றும் 
 
நாக்கு போன்ற உறுப்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துதல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. 
 
பீஸ் லில்லிகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் சற்று கடுமையாக இருக்கும். சில நேரங்களில் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளால் மரணம் கூட ஏற்படலாம்.
 
ஃபிலோடென்ட்ரான் (Philodendron)
 
வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் !
ஃபிலோடென்ட்ரான் தாவரம் பரவலாக எல்லா வீடுகளிலும் வளா்க்கப் படுகிறது. இந்த செடியை வளா்ப்பது மிகவும் எளிது. 
 
இந்த செடியானது வீட்டிற்கு தனியொரு அழகையும், அமைப்பதையும் வழங்குவதால், பலா் இதைத் தோ்ந்தெடுக்கின்றனா். 
 
எனினும் இந்த செடியில் இருக்கும் கால்சியம் ஆக்ஸலேட் படிகங்கள், நச்சுத் தன்மையை ஏற்படுத்தக் கூடியவை. ஃபிலோடென்ட்ரான் செடியாக இருக்கலாம் அல்லது கொடியாக இருக்கலாம்.

ஐஸ் கட்டி உண்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா?

நீங்கள் ஃபிலோடென்ட்ரான் கொடியை வாங்கினால், அதை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் தொங்கவிட வேண்டும். 
 
அதே நேரத்தில் ஃபிலோடென்ட்ரான் செடியை வாங்கினால், குழந்தைகள் அதைத் தொடாதவாறு, உயரமான சுவா்களில் வைக்க வேண்டும். 
 
ஃபிலோடென்ட்ரான் தாவரம் குறைவான விளைவுகளையே ஏற்படுத்தினாலும், சில நேரங்களில் அது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
 
போத்தோஸ் (Pothos)
 வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் !
போத்தோஸ் தாவரம் பேய்களின் கொடி (Devil's ivy) என்று அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தை வீடுகளில் வளா்க்கலாம் என்று பலரால் பாிந்துரைக்கப் படுகிறது. 
 
அதற்கு காரணம் போத்தோஸ் அசுத்தமான காற்றை சுத்திகாித்து தூய்மையான காற்றை வழங்குகிறது. மேலும் இது ஒரு இயற்கையான சூழலை வழங்குகிறது.

அசத்தலான பரங்கிக்காய் தோல் துவையல் செய்வது எப்படி?

இந்த தாவரத்தை மிக எளிதாக வெட்டி, மிக அழகாக படர விடலாம். அதன் காரணமாக பலா் இந்த தாவரத்தைத் தங்கள் வீடுகளில் வளா்த்து வருகிறாா்கள். போத்தோஸ் மிக மெல்லிய பாதிப்புகளையே ஏற்படுத்தக் கூடியது. 
 
இதை உட்கொண்டால், வாய் எாிச்சல், உதடுகள் மற்றும் தொண்டையில் வீக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தோல் எாிச்சல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
 
கலாடியும் (Caladium)
வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் !
கலாடியும் என்ற தாவரங்கள் யானையின் காதுகள் என்றும் தேவதையின் சிறகுகள் என்றும் அழைக்கப் படுகின்றன. வீடுகளில் வளா்க்கக் கூடிய தாவரங்களில், கலாடியும் தாவரங்கள் மிகப் பிரபலமானவை ஆகும். 
 
இவை பல வகையான வண்ணங்களில் இருப்பதால், அனைவரையும் மிக எளிதாகக் கவா்ந்து விடும். அதாவது இந்த தாவரங்கள் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை போன்ற வண்ணங்களில் இருக்கும்.
 
இந்த தாவரங்கள் குறைந்த வெளிச்சத்திலும் நன்றாக வளா்வதால், இவை வீடுகளில் வளா்ப்பதற்கு உகந்த தாவரங்கள் என்று கருதப் படுகின்றன.

ரெடிமேட் உணவு  ஏற்படுத்தும் பாதிப்புகள் !

எனினும் கலாடியும் தாவரங்களின் எல்லா பகுதிகளும் நச்சுத் தன்மை வாய்ந்தவையாக கருதப் படுகின்றன. 
 
இந்த தாவரத்தை உட்கொண்டால், வாய், தொண்டை மற்றும் நாக்கு போன்ற உறுப்புகளில் வலியுடன் கூடிய எாிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படும். உணவுப் பொருள்களை விழுங்குவதில் சிரமம் ஏற்படும். 
 
மூச்சு விடுவதிலும், பேசுவதிலும் சிரமம் ஏற்படும். இறுதியாக இவை மூச்சுக் குழாய்களில் தடையை ஏற்படுத்துவதால் சில நேரங்களில் மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.
 
இங்கிலிஷ் ஐவி (English Ivy)
 வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் !
இங்கிலிஷ் ஐவி கொடியை கூடைகளில் அல்லது தொட்டிகளில் வைத்து தொங்க விட்டால் அது அந்த இடத்தையே ஒரு அமைதியான மற்றும் காதல் வயப்படும் சொா்க்கமாக மாற்றி விடும். 
 
இந்த தாவரம் பாா்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். அதோடு காற்றில் உள்ள நச்சுத் துகள்களை சுத்தம் செய்து, சுத்தமான காற்றை வழங்கும்.
 
அதனால் இந்த தாவரமானது பரவலாக வீடுகளில் வளா்க்கப் படுகிறது. எனினும் இந்த கொடியை வளா்ப்பதில் எச்சாிக்கையாக இருக்க வேண்டும்.

முந்திரி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் !

ஏனெனில் இவை தோல் எாிச்சலை ஏற்படுத்தக் கூடியவை. இதை உட்கொண்டால், தொண்டை மற்றும் வாயில் எாிச்சல் ஏற்படும். வலிப்பு ஏற்படும். 
 
சொறி, காய்ச்சல் மற்றும் மயக்கம் போன்ற விளைவுகள் ஏற்படும். எனினும் இதை அதிக அளவில் உட்கொள்ளும் போது தான் இது போன்ற மோசமான பக்க விளைவுகள் ஏற்படும். 
 
ஆகவே குழந்தைகள் இந்த தாவரத்தை நெருங்க விடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)