சுவையான கடலைப்பருப்பு வெல்லம் போளி செய்வது எப்படி?





சுவையான கடலைப்பருப்பு வெல்லம் போளி செய்வது எப்படி?

0
பருப்பு வகைகளில் சில பூமிக்கு அடியிலும், சில பூமிக்கு மேலும் விளைகின்றன. எப்படி விளைந்தாலும் பருப்புகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. 
சுவையான கடலைப்பருப்பு வெல்லம் போளி செய்வது எப்படி?
இவற்றை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல வகையான நன்மைகள் ஏற்படுகிறது. நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பருப்பு வகைகள் ஒன்றாக கடலைப் பருப்பு இருக்கிறது
எவ்வளவு தான் இனிப்பு வகைகள் இருந்தாலும் இந்த போளிக்கு இணையாக முடியுமா. மிகவும் குறுகிய நேரத்தில் சுவையான போளி தயார் செய்து உங்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைக்கலாம்.
 
செய்து நேரத்தில் கொடுக்கக் கூடிய பொருட்களும் மிகவும் குறைவானது தான் அதே நேரத்தில் சத்து மிகுந்ததாகும். 

அப்படி உங்களுக்கு மைதா போளி வேண்டாம் என்றால் மைதாவுக்கு பதில் கோதுமையில் கூட போளி செய்யலாம். 

அது இன்னும் சத்து வாய்ந்ததா இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடலைப்பருப்பு வெல்லம் போளி விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள் : .
 
மைதா - 1 கப்
 
கடலைப்பருப்பு - 1 கப்
 
வெல்லம் - ½ கப்
 
துருவிய தேங்காய் - ½ கப்
 
நெய் - 50 gm
 
தண்ணீர் - தேவையான அளவு
 
உப்பு - சிறிதளவு
செய்முறை : .
சுவையான கடலைப்பருப்பு வெல்லம் போளி செய்வது எப்படி?
கடலைப்பருப்பு வெல்லம் போளி முதலில் மைதா மாவை தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைவது தண்ணீர் பிசைய வேண்டும். பின் மாவை சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். 

பின் கடலைப் பருப்பை குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். இரண்டு விசில் வைக்க வேண்டும். கடலை பருப்பு குழையாமல் இருக்க வேண்டும். 

பின்னர் வேக வைத்த கடலைப் பருப்பை வடித்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி கொள்ள வேண்டும். 

பின் ஒரு மிக்ஸி ஜாரில் வேக வைத்த கடலைப் பருப்பு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் வெல்லத்தை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் அரைத்தவற்றை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதே மிக்ஸி ஜாரில் தேங்காய் சில்லை அடித்து தேங்காய் துருவலாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் கடலைப் பருப்பு கலவையுடன் தேங்காய் துருவலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது பூரணம் தயார் அடுப்பில் தோசை கல்லை சிறிது எண்ணெய் ஊற்றி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் பிசைந்த வைத்துள்ள மாவை வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் சிறிது எண்ணெய் ஊற்றி தடவி சப்பாத்தி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். 
அதில் சிறு உருண்டையை எடுத்து தட்டி அதில் பூரணத்தை வைத்து மூடி வைத்து வாழை இலையில் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.  
பின் தட்டி வைத்த மாவை தோசைக் கல்லில் சிறிது நெய் விட்டு பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சூடான கடலைப் பருப்பு வெல்லம் போளி போளி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)