தோசை சுடும் போது தோசை சரியாக வராததற்கு காரணம்?





தோசை சுடும் போது தோசை சரியாக வராததற்கு காரணம்?

0
தோசைக் கல்லில் புதிதாக தயாரிக்கும் போது வார்ப்பிரும்பு கலப்பு அதிகமாக இருப்பதால் முகத்தில் பருக்குழிகள் போன்று தோசைக் கல்லில் சிறு துளைகள் இருக்கும் . 
தோசை சுடும் போது தோசை சரியாக வராததற்கு காரணம்?
அது முதலில் சுடும் தோசைகளின் மாவு துகள்களை சற்று பிடித்துக் கொள்வதால் சரியாக வராது.

அதனை தவிர்க்கும் விதமாகத் தான் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவுகின்றோம் அல்லது புது தோசைக் கல்லில் வெங்காயம் தடவுவார்கள்.

நாளடைவில் மாவும், கருகிய மாவின் கரியும், சிறிது அழுக்குகளுமாக சேர்ந்து அந்த சிறு துளைகளை அடைத்துக் கொள்வதால் அதன் பின்னர் தோசை வார்க்கும் போது பிய்ந்து போகாமல் வரும். 
தோசைக்கல் வாங்கி பாத்திர பட்டறையில் கொடுத்து ஒரு முறை பபிங் (Buffing) செய்து கொண்டாலும் வெகு சூப்பராக தோசை பிய்ந்து போகாமல் வரும் .
இப்போது லேட்டஸ்ட்டாக வரும் நான் ஸ்டிக் தோசைக்கல்லில் அதன் மேற்பரப்பு பல மடங்கு பாலிஷ் செய்து பளபள வென்றிருப்பதால் அதில் தோசை வார்த்தால் ஒட்டிக் கொள்ளாமல் சுலபமாக வந்து விடுகின்றது .
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)